விக்ரம் காதலித்த பெண், அஜித்துக்கு ஜோடியானவர்; அடையாளம் தெரியாமல் மாறிப்போன உல்லாசம் நடிகை!

1994ல் 'கருத்தம்மா' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மகேஸ்வரி, தமிழில் அஜித் உடன் 'நேசம்', 'உல்லாசம்' போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 2000-ம் ஆண்டில் நடிப்பை விட்டு விலகிய இவர், 2008-ல் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்துகொண்டார்.

1994ல் 'கருத்தம்மா' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மகேஸ்வரி, தமிழில் அஜித் உடன் 'நேசம்', 'உல்லாசம்' போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 2000-ம் ஆண்டில் நடிப்பை விட்டு விலகிய இவர், 2008-ல் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்துகொண்டார்.

author-image
WebDesk
New Update
vikram ajith

விக்ரம் காதலித்த பெண், அஜித்துக்கு ஜோடியானவர்; அடையாளம் தெரியாமல் மாறிப்போன உல்லாசம் நடிகை!

90-களில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத் திரையுலகில் கலக்கி, ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்தவர் நடிகை மகேஸ்வரி. ஒரு காலத்தில் அழகால் அனைவரையும் கவர்ந்த இவர், தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியான புகைப்படங்களில் முற்றிலும் மாறிப்போய், ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். அவருடைய தற்போதைய புகைப்படங்களில் அவர்தான் என்று கண்டுபிடிப்பதே ரசிகர்களுக்கு சவாலாக உள்ளது.

Advertisment

1994-ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'கருத்தம்மா' படத்தின் மூலம் மகேஸ்வரி ரோஸி என்ற கதாபாத்திரத்தில் தமிழில் அறிமுகமானார். அதே ஆண்டு, தெலுங்கில் வெளியான 'அம்மாயி குப்பாரம்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி, அங்கு தனக்கென இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

ajith heroine

1995-ல் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா தயாரித்த ‘குலாபி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து, சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டார். அதே ஆண்டில், கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்த ‘அன்னவ்ரா மக்கள்’ படத்திலும் அறிமுகமானார். தமிழில், 1996-ல் பிரபுவுடன் 'பாஞ்சாலங்குறிச்சி', 1997-ல் அஜித்துடன் 'நேசம்', மற்றும் 'உல்லாசம்' (விக்ரமுடன்) ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

Advertisment
Advertisements

ajith heroine

நடிகர் அஜித்துடன் அவர் நடித்த இரண்டு படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன. மேலும், பிரபுதேவா, மீனா நடிப்பில் சுந்தர்.சி இயக்கிய 'நாம் இருவர் நமக்கு இருவர்' படத்திலும் மகேஸ்வரி நடித்திருந்தார். 2000-ம் ஆண்டு வெளியான ‘அதே மனிதன்’ திரைப்படம் தமிழில் அவரது கடைசி படமாக அமைந்தது. தெலுங்கில், ‘திருமலை, திருப்பதி வெங்கடேசா’ என்ற படத்திற்குப் பிறகு, சினிமா துறையில் இருந்து முழுவதுமாக விலகினார்.

Remember Maheswari_ T

2008-ல் ஜெயகிருஷ்ணா என்ற சாஃப்ட்வேர் இன்ஜினியரை மணந்த மகேஸ்வரி, தற்போது தன் குடும்ப வாழ்க்கையில் முழு கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவரது சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. அந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், '90-களில் பார்த்த மகேஸ்வரியா இது?' என ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். சில ரசிகர்கள், அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவாரா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: