பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா கதாப்பாத்திரத்தில் நடித்துவரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி சீரியலில் இருந்து விலகப்போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெலியாகி உள்ளது. இதற்கான காரணம் என்ன என்று பார்ப்போம்.
தற்போது சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ரேஷ்மா, வேலன்னு வந்துட்டா வெள்ளக்காரன் என்கிற விஷ்ணு விஷால் படத்தில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதை தொடர்ந்து வெள்ளித்திரையில் சில படங்களில் ரேஷ்மா நடித்திருந்த நிலையில், அதற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
இதனிடையே 2019-ம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ரேஷ்மா கலந்து கொண்ட நிலையில் அவருக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. இந்நிலையில் திரைப்படங்களை விட சீரியலில் ரேஷ்மாவுக்கு அதிக வாய்ப்பு கிடைத்து.
குறிப்பாக சீதா ராமம், அபி டெய்லர் உள்ளிட்ட சீரியல்களில் நெகட்டிவ் ரோலில் நடித்து கவனம் ஈர்த்தார். வில்லியாக மட்டுமே நடித்து வந்த ரேஷ்மா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த சீரியலுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில் ரேஷ்மா, ராதிகா என்ற தன்னுடையா கதாப்பாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.
இந்த நிலையில் நடிகை ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்கியலட்சுமி சீரியல் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ரேஷ்மா விலகப் போவதாகவும் அதனால் தான் அவர் அந்த போட்டோக்களை பதிவிட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் ரேஷ்மா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதால், பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் முடிவை அவர் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும் ரேஷ்மா இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“