சீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ

reshma madhan love proposal in ZeeTamil Talk Show : பூச்சுடவா தொடரில் நடித்து வரும் ரேஷ்மா, மதன் லவ் ப்ரொபோஸ் செய்யும்  வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது

ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பூவே  பூச்சுடவா தொடரில் நடித்து வரும் ரேஷ்மா, மதன் லவ் ப்ரொபோஸ் செய்யும்  வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஜீ தமிழில் பொங்கல் கொண்டாட்டமாக, Stylish தமிழச்சி v/s Mass தமிழன் என்ற சிறப்பு டாக் ஷோ நிகழ்ச்சி கடந்த 15ம் தேதி ஒளிபரப்பானது. இதில், ரேஷ்மா, மதன் இருவரும் கலந்து கொண்டனர். இதில் பேசிய நடிகை ரேஷ்மா, தனக்கு மதன் இதுவரை காதல் ப்ரபோஸ் செய்யவில்லை என்று கூறினார்.


எங்கள் வாழவில்  அனைத்து சம்பவங்களும் எதார்த்மகாக நடைபெற்றது என ரேஷ்மாவின் கருத்துக்கு மதன்  கரு பழனியப்பனிடம் பதில் அளித்தார்.

பிறகு, பிரியா ராமனின் வேண்டுகோளை ஏற்று, மேடையிலேயே வெட்கத்துடன் ரேஷ்மாவிடம் தனது காதலை வெளிபடுத்தினார்.

முன்னதாக, கடந்த ஜனவரி 1, புத்தாண்டு தினத்தன்று, ரேஷ்மா, மதன் பாண்டியன் இருவரும்  தங்கள் காதல் திருமணத்தை உறுதி செய்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  இதுகுறித்து பதிவிட்ட ம் மதன் , “இந்த ஆண்டு எங்களுக்கு ஸ்பெஷலானது. எனக்கு ஸ்பெஷலானவர் என்றென்ன்றும் என்னவளாகிறார். புத்தாண்டில் இதை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். ஆம் நாங்கள் திருமண பந்தத்தில் இணைய உள்ளோம் உங்கள் அன்பு மற்றும் ஆசிர்வாதங்களுடன். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.

ரேஷ்மா பிறந்தது கேரளாவில், வளர்ந்தது பெங்களூருவில். மாடலிங் துறையில் கொண்டிருந்த ஈர்ப்பால், சென்னைக்கு மூட்டையைக் கட்டியிருக்கிறார். 2015-ல் சென்னையில் நடந்த பேஷன் ஷோவில் முதல் 10 இடத்திற்குள் வந்திருந்தார். 2016-ல் நடந்த ஃபேஷன் ஷோவில் இரண்டாவது runner-up ஆகவும் வந்திருக்கிறார். அதன்பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ராகவ் உடன் இணைந்து ’டான்ஸ் ஜோடி டான்ஸ்’ மூலம் தமிழ் ரியாலிட்டி ஷோவில் அறிமுகமானார். இந்த நிகழ்ச்சி தான் அவருக்கு ஒரு மைல் கல்லாக அமைந்தது. அவர் நடிப்பின் மீது உள்ள வெறியையும் நடனத்தின் மீது அவருக்கு இருக்கிற காதலையும் இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தான் இவருக்கு ’பூவே பூச்சூடவா’ சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Reshma madhan love proposal in stylishtamilachi masstamilan talk show reshma poove poochudava serial

Next Story
பட்டா கடத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சர்ச்சை : வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express