/tamil-ie/media/media_files/uploads/2021/04/Resup.jpg)
Reshma New Serial in Colors Tv Abi Tailors Trailer
Reshma New Serial in Colors Tv Abi Tailors Trailer Tamil News : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பூவே பூச்சூடவா’ சீரியலில் நடித்துவரும் ரீல் ஜோடிகள் விரைவில் ரியல் ஜோடிகளாகவுள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2021/04/Res1.png)
கடந்த 2018-ம் ஆண்டின் டாப் சீரியல் என்று பெயர் வாங்கியிருந்த இந்த சீரியலின் நாயகியான ரேஷ்மா மற்றும் நாயகனான மதன் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ள நிலையில், தற்போது ரேஷ்மா நடித்துவரும் புதிய தொடரின் ட்ரெயிலர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2021/04/Res2.png)
ஆயிரம் எபிசோடுகளை கடந்து மக்கள் மனதை வென்ற ஒரு சில சீரியல்களில் பூவே பூச்சூடவா தொடரும் ஒன்று. இதில், சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரின் மனதை வென்றார் ரேஷ்மா. இதனைத் தொடர்ந்து, தற்பொழுது ரேஷ்மா முன்னணி கதாநாயகியாக நடிக்கும் புதிய சீரியல் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கலர்ஸ் தமிழில் விரைவில் வெளியாகவிருக்கும் இந்த சீரியலின் பெயர், 'அபி டெய்லர்ஸ்'. பெயருக்கு ஏற்ற வகையில் டெய்லராக வரும் ரேஷ்மா புரோமோவிலேயே பல்வேறு வகையான உடைகளின் வடிவமைப்புகளை அடுக்கடுக்காகச் சொல்லி அசத்துகிறார். இவ்வளவு நீண்ட டயலாக் பேசி ஆரம்பத்திலேயே ஈர்த்திருக்கிறார் ரேஷ்மா. எப்போது இந்த சீரியல் வரும் என்கிற கேள்விகளோடு பெரும்பாலான ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தற்போது வரை இதன் கதைக்களம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், நிச்சயம் சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.