By: WebDesk
Updated: December 2, 2019, 11:16:15 AM
பிக்பாஸ் ரேஷ்மா
Bigg Boss Reshma Pasupaletti: நடிகர் பாபி சிம்ஹாவின் உறவினரும், அவருக்கு சகோதரி முறையுமான ரேஷ்மா பசுபலேட்டி சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘வம்சம்’ சீரியலில் நடிப்புத் துறைக்கு அறிமுகமானார். ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து நடித்த அந்த சீரியலுக்குப் பிறகு, ‘மசாலா படம்’ படத்தில் கதாநாயகியாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதன் பிறகு ‘கோ 2’-ல் செய்தி தொகுப்பாளராகவும், ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்கரன்’ படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்திலும் நடித்தார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் ரேஷ்மா. அப்போது தனது முதல் திருமணம் பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்டதாக பகிர்ந்து கொண்ட அவர், அது சரியாக அமையாததால் விவாகரத்து செய்ததையும் கூறினார். பின்னர் தான் அமெரிக்காவில் வசிக்கும் போது மீண்டும் திருமணம் செய்துகொண்டு ஒரு மகனைப் பெற்றதாகவும், இரண்டாவது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பிரிந்து வாழ்வதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் ரேஷ்மா தன்னுடன் ஒரு நபர் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். “வாழ்க்கை மிகவும் குறுகியது. உங்களை சிரிக்க வைக்கும்,நேசிக்கும் நபர்களுடன் அதை செலவிடுங்கள்” என அதற்கு கேப்ஷனும் கொடுத்துள்ளார். அந்த படத்தில் ரேஷ்மாவுடன் இருக்கும் நிஷாந்த் ரவீந்திரன் தான் அவரை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக, சமூக வலைதளங்களில் வேகமாக செய்திகள் பரவி வருகின்றன. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வமாக ரேஷ்மா எதையும் அறிவிக்கவில்லை.