scorecardresearch

‘நானே ஒரு குத்துவிளக்கு’: கடை திறப்பு விழாவில் குத்துவிளக்கு வாங்க மறுத்த சீரியல் நடிகை ரேஷ்மா

நானே ஒரு குடும்ப குத்துவிளக்கு, எனக்கு எதுக்கு வெள்ளி குத்துவிளக்கு; கடைத் திறப்பு விழாவில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா ஜாலி பேச்சு

reshma
நகைக்கடை திறப்பு விழாவில் ரேஷ்மாவுக்கு குத்துவிளக்கு பரிசளிக்கப்பட்டது

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா நகைக்கடை திறப்பு விழாவில், நானே ஒரு குடும்ப குத்துவிளக்கு, எனக்கு எதுக்கு வெள்ளி குத்துவிளக்கு என நகைச்சுவையாக கூறியது அங்கிருந்தவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது.

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடித்து கலக்கி வருபவர் ரேஷ்மா பசுபுலேட்டி. தற்போது ஜீ தமிழ் சேனலில் சீதாராமன் சீரியலிலும் நடித்து வருகிறார். மேலும் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியிலும் நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ளார். சின்னத்திரை மட்டுமல்லாது வெள்ளித் திரையிலும் பிஸியாக நடித்து வரும் ரேஷ்மா, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: இயற்கையோடு கலந்த மாயாஜால அழகு அருமை… தன்யா ரவிச்சந்திரன் க்ளிக்ஸ்

இந்தநிலையில், ரேஷ்மா இன்று நாகர்கோவிலில் ஒரு நகைக்கடை திறப்பு விழாவில் கலந்துக் கொண்டார். ரேஷ்மாவை பார்க்க மக்கள் அலைக்கடலென திரண்டனர். கடைதிறப்பு விழாவில் குத்துவிளக்கு ஏற்றிய ரேஷ்மா, நகைகளை அறிமுகமும் செய்து வைத்தார். பின்னர் ரேஷ்மாவிற்கு பரிசாக நகைக்கடை உரிமையாளர்கள் குத்துவிளக்கு கொடுக்க, நானே ஒரு குடும்ப குத்துவிளக்கு, எனக்கு எதுக்கு வெள்ளி குத்துவிளக்கு என ஜாலியாக சொன்னார். இதைக்கேட்டு அங்கிருந்த கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Reshma pasupuleti jolly viral speech at nagercoil shop opening function