விஜய் டி.வி, ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் தற்போது விஜய் டிவியில் பாக்கியலட்சுமி, ஜீ தமிழில் கார்த்திகை தீபம் போன்ற தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சீரியல் மட்டுமல்லாது திரைப்படங்களிலும் ரேஷ்மா நடித்துள்ளார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்திருந்த அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், அவர் திடீரென 12 கிலோ வரை எடை குறைத்ததாக கூறியுள்ளார். எனக்கு சில உடல் பிரச்சனைகள் இருந்ததால் திடீர் என்று உடல்எடை கூடியது இதன் பின் உடற்பயிற்சி செய்து எடைகுறைத்துள்ளேன்.
ஷுட்டிங் இல்லை என்றால் ஜிம்மில் தான் இருப்பேன். 9 மாதமாக உணவில் கட்டுப்பாட்டோடு இருந்தேன். முக்கியமாக சர்க்கரை எடுக்க வில்லை. அதனால் தான் என்னால் 12 கிலோ வரை உடல் எடை குறைக்க முடிந்தது என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“