சன் டிவி சீரியலுக்கு விடைகொடுத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை: புதுசா வர்றவங்க யாரு?
serial-actress reshma Pasupuleti exits from sun tv’s Anbe Vaa serial Tamil News: பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடித்து வரும் நடிகை ரேஷ்மா பசுபலேட்டி சன் டிவியின் அன்பே வா சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார்.
Reshma Pasupuleti tamil news: வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்’ திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரம் மூலம் தமிழ் மக்களுக்கு பரீட்சையம் ஆனவர் ரேஷ்மா பசுபலேட்டி. பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து ஏராளமான விளம்பரங்கள், சின்னத்திரை தொடர்களிலும் கம்மிட் ஆகி நடித்து வருகிறார்.
Advertisment
ஆங்கில செய்தி வாசிப்பாளராக தன் திரை பயணத்தைத் தொடங்கிய ரேஷ்மா, தொகுப்பாளினியாகவும், தொழிலதிபராகவும் தனித்து வளர்ந்து வருகிறார். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா சீரியலில் வந்தனா என்ற ரோலில் நடித்து வருகிறார். அன்பே வா சீரியல் பெரிய ஹிட் இல்லை என்றாலும் ஓரளவிற்கு மக்களிடம் சீரியல் ரீச் ஆகியுள்ளது.
இந்நிலையில், நடிகை ரேஷ்மா 'அன்பே வா' சீரியலில் இருந்து வெளியேறுகிறார். அவருக்கு பதில் நடிகை வினோதினி இந்த ரோலில் நடிக்கிறார். நடிகை வினோதினி குறித்து நமக்கு தகவல் எதும் கிடைக்கவில்லை. நடிகை ரேஷ்மா சமீபத்தில் தான் விஜய் டிவியில் ஹிட்டாக ஓடும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா ரோலில் நடிக்க வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.