கங்குவா படத்தை முந்தாத ரெட்ரோ; முதல்நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் என்ன தெரியுமா?

சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் "கங்குவா"வின் முதல் நாள் வசூலை விடக் குறைவு என்றாலும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் "கங்குவா"வின் முதல் நாள் வசூலை விடக் குறைவு என்றாலும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Retro Surya

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ரெட்ரோ. இந்த கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளதால் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார் போல், ரெட்ரோ திரைப்படம் திரையரங்குகளில் நேற்று (மே 1, 2025) வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Retro Box Office Collection Day 1: Suriya film soars high as the Tamil action film amasses almost Rs 20 cr, but can’t surpass Kanguva

தொழில் துறை வட்டாரங்களின் தகவல்படி, ரெட்ரோ திரைப்படம் தனது முதல் நாளிலேயே இந்தியாவில் மட்டும் ரூ19.33 கோடி நிகர வசூலைப் பெற்றுள்ளது. ஆனால் இந்த வசூல், சூர்யாவின் முந்தைய பிரம்மாண்ட படமான "கங்குவா"வின் முதல் நாள் வசூலான ரூ28 கோடியை விடக் குறைவு தான், என்றாலும், படத்தின் ஆரம்பத்திற்கு இது ஒரு வலுவான தொடக்கம் என்று கருதப்படுகிறது. "கங்குவா" திரைப்படம் முதல் நாளில் நல்ல வசூலைப் பெற்றிருந்தாலும், கலவையான விமர்சனங்களால் அடுத்தடுத்த நாட்களில் வசூல் சரிவை சந்தித்தது.

ரெட்ரோ திரைப்படத்தின் திரையரங்குகளில் ரசிகர்களின் வருகை சிறப்பாக இருந்தது. தமிழ்நாட்டில் மட்டும் சராசரியாக 78.89% இருக்கைகள் நிரம்பியிருந்தன. காலை 75%மற்றும் மதிய காட்சி 83% பார்வையாளர்களும், மாலை 78% மற்றும் இரவு காட்சிகளில் 77% பார்வையாளர்களும் வருகை தந்துள்ளனர். "கங்குவா" திரைப்படம் அனைத்து மொழிகளிலும் முதல் நாளில் நல்ல பார்வையாளர்களைப் பெற்றிருந்தாலும், இந்தியில் மிகக் குறைவாக 11% மற்றும் தெலுங்கில் அதிகபட்சமாக 58% பார்வையாளர்களை மட்டுமே கொண்டிருந்தது.

Advertisment
Advertisements

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் மற்றும் பிரசாந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யாவைப் பொறுத்தவரை முதல் நாள் வசூல் சற்று குறைவாக இருந்தாலும், பூஜா ஹெக்டேவுக்கு இது ஒரு சிறப்பான தொடக்கமாக இந்த படம் அமைந்துள்ளது. அவர் கடைசியாக நடித்த "தேவா" திரைப்படம் முதல் நாளில் வெறும் ரூ5.5 கோடி மட்டுமே வசூல் செய்து, மொத்தமாக ரூ33.9 கோடி மட்டுமே திரையரங்குகளில் வசூலித்தது. குறிப்பிடத்தக்கது.

படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சூர்யா, இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் தொலைநோக்குப் பார்வையை வெகுவாகப் பாராட்டியிருந்தார். மேலும், அவர் திரைத்துறையில் ஒரு "மாற்றத்தை ஏற்படுத்துபவர்" என்றும், திரைக்கதை, ஒளிப்பதிவு மற்றும் கதாபாத்திரங்களின் நடிப்பு என அனைத்திலும் சுப்பராஜின் தனித்துவமான பாணி வெளிப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். நடிகர்களுக்கு புதிய சவால்களை அளிக்கும் அவரது இயக்கும் திறனையும் சூர்யா புகழ்ந்து பேசினார்.

ரெட்ரோ திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்திருந்தாலும், சூர்யா மற்றும் பூஜா ஹெக்டேவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டுள்ளது. படத்தின் வலுவான தொடக்கத்தைக் கருத்தில் கொண்டு, வார இறுதி நாட்களில் இன்னும் அதிக வசூலை எட்ட முடியும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் உள்ளனர்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: