ரெட்ரோ விமர்சனம்: சூர்யாவின் சம்பவமா.. சூர்யாவுக்கு சம்பவமா? படம் எப்படி இருக்கு?

சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள ரெட்ரோ திரைப்படத்தின் X தள விமர்சனத்தை பார்ப்போம். அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். படத்தின் வெளியீட்டை டீஜே இசைக் கச்சேரியுடன் ஆட்டம் பாட்டத்துடன், மேள தாளம் முழங்க விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள ரெட்ரோ திரைப்படத்தின் X தள விமர்சனத்தை பார்ப்போம். அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். படத்தின் வெளியீட்டை டீஜே இசைக் கச்சேரியுடன் ஆட்டம் பாட்டத்துடன், மேள தாளம் முழங்க விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
retro review

ரெட்ரோ விமர்சனம்: சூர்யாவின் சம்பவமா..சூர்யாவுக்கு சம்பவமா? படம் எப்படி? X தள விமர்சனம்!

நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ளார். படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் இன்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியாகி உள்ளது.

Advertisment

தமிழ் நாட்டில் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். இப்படத்தின் வெளியீட்டை டீஜே இசைக் கச்சேரியுடன் ஆட்டம் பாட்டத்துடன், ரசிகர்கள் மேள தாளம் முழங்க விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

அந்தமானில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் ரவுடி கும்பலின் தலைவனுடன் சூர்யாவுக்கு பகை ஏற்படுகிறது. அனைத்து பிரச்சினைகளையும் சூர்யா முறியடித்தாரா? கருவூலப் பொருட்களின் கதி என்ன? பூஜா ஹெக்டே என்ன ஆனார்? என்பது பரபரப்பான மீதி கதை.

90 காலகட்டத்தை குறிப்பிடும் படத்தில் ஸ்டைலான லுக்கில் சூர்யா அசத்தி இருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் வெளுத்து வாங்கி இருக்கிறார். சிரிப்பு தெரியாமல் வளரும் சூர்யா சிரிக்க முயற்சி செய்யும் காட்சிகள் நேர்த்தி. மேக்கப் இல்லாத முகமாய் அழகான நடிப்பால் கவர்கிறார் பூஜா ஹெக்டே. நெளிவான அவரது நடனம் ரசிக்க வைக்கிறது. நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

Advertisment
Advertisements

"கார்த்திக் சுப்பராஜ் படம்னாலே நல்லாதான் இருக்கும் எதிர்பார்ப்பும் அதிகமா இருக்கு" என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் 10,000 ஏழை பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கும் வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்த பின், லோகேஷ் கனகராஜ் கூறினார்.

ரெட்ரோ படம், 90களில் நடக்கும் சம்பவங்களை கதைக்களமாக கொண்டதாக இருக்கிறது. கங்குவா படம் சூர்யாவை கவிழ்த்து விட, இப்போது ரெட்ரோதான் அவரது சரிந்து கிடக்கும் மார்கெட்டை தூக்கி நிறுத்த வேண்டுமென ரசிகர்கள் கூறி வருகின்றனர். அவர்கள் நினைத்தது போல, ரெட்ரோ படம் அமைந்ததா? ரசிகர்களின் விமர்சனங்களையே பார்ப்போமே. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம், ரெட்ரோ. மே 1ஆம் தேதியான இன்று, இப்படம் வெளியாகி இருக்கிறது. இதன் X தள விமர்சனத்தை இங்கே பார்ப்போம்.

ரெட்ரோ படத்தின் முதல் பாதி வெறித்தனமாக இருப்பதாக படம் பார்த்த ரசிகர்கள் X தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். முதல் பாதியில் காமெடியும் காதலும் கலந்து இருப்பதாகவும், இரண்டாம் பாதியில் சண்டை-ஆக்‌ஷனை பார்க்க காத்திருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஒரு சில ரசிகர்கள், படத்தை சூர்யாவின் சம்பவம் என்று புகழ்ந்து வருகின்றனர். படத்தில் பாசிடிவ் பற்றி பேசிய ரசிகர்கள், பூஜாவின் கேரியர் பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ். இந்த படத்திற்காக அவர் உண்மையில் அனைத்தையும் கொடுத்துள்ளார். முதல்பாதி திரைக்கதை, இடைவேளை, மாஸ் காட்சிகள். எப்போதும் போல பி.ஜி.எம். கேமரா அசைவுகள் & காட்சிகள் அனைத்தும் சிறப்பாக உள்ளதாக பதிவிட்டுள்ளார்.

படம் பார்த்த அனைவரும் ஒரு குறிப்பிட்ட 15 நிமிட சிங்கிள் ஷாட் குறித்து பேசி வருகின்றனர். அந்த காட்சி அற்புதமாக இருப்பதாகவும், சூர்யா ஒரு நடிகராக நன்கு பர்ஃபார்ம் செய்திருப்பதாகவும் சிலர் கூறி வருகின்றனர்.

சூர்யா பயங்கர பெர்ஃபார்மன்ஸ், பூஜாவுடன் ஜோடி பெஸ்ட். கனிமா பாடல் அற்புதமாக உள்ளது. அட்டகாசமான பிரேம்கள். சிங்கிள் ஷாட் சூப்பர். சில பின்னடைவுகள் படத்தில் உள்ளன. கிளாசிக் காதல் விவரிப்பு உள்ளதாக நெகிழ்ச்சியாக ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.

 

ரெட்ரோ முதல் பாதி - நன்று. அருமையான முதல் 30 நிமிட திரைக்கதை, கனிமா சிங்கிள் ஷாட் காட்சியில் உச்சம். இடைவெளி பகுதி தூய பேரின்பம் + நெருப்பு. சூர்யா-பூஜா ஜோடி அற்புதம். கன்னடிபூவே பாடல் திரையில் நன்றாக இருந்தது. ஜோஜுஜார்ஜிற்கான நல்ல பாத்திரப்படைப்பு. 

 

சந்தோஷ் நாராயணன் பி.ஜி.எம். இதுவரை மிகவும் நல்லது & அதிக மந்தமான தருணங்கள் இல்லாமல் ஈடுபாடு, இரண்டாம் பாதியில் என்ன இருக்கிறது என்று பார்க்க காத்திருக்கிறேன். போர் இப்போது தொடங்குகிறது..

நீண்ட காலமாக, திரையில் எந்த சூர்யாவை பார்க்க வேண்டுமென நினைத்தோமோ, அந்த சூர்யாவை பார்க்க முடிந்தது என்றும் கூறி வருகின்றனர்.

Surya

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: