/tamil-ie/media/media_files/uploads/2023/05/tamil-indian-express-2023-05-25T161832.722.jpg)
Keerthy Suresh and her sister Revathy Suresh
Keerthy Suresh Tamil News: தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான நடிகையர் திலகம் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றறார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளிலும் நடிக்கிறார். நடிகர் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்த இவர் தற்போது மாமன்னன், சைரன் ஆகிய 2 படங்கள் கைவசம் உள்ளன. அஜித்குமாரின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக தயாராகும் 'போலோ சங்கர்' படத்தில் சிரஞ்சீவியிடன் நடித்து வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/05/tamil-indian-express-2023-05-25T162540.529.jpg)
இயக்குநரான ரேவதி சுரேஷ்
இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சகோதரி ரேவதி சுரேஷ் இயக்குநராகி இருப்பதை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/05/tamil-indian-express-2023-05-25T162144.821.jpg)
கீர்த்தி சுரேஷ் சகோதரி ரேவதி சுரேஷ் பிரபல இயக்குநர் பிரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் ஒரு குறும்படத்தை இயக்கி இருப்பதாக கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/05/tamil-indian-express-2023-05-25T162633.127.jpg)
’தேங்க் யூ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் போஸ்டரை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, தனது சகோதரிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த குறும்படத்தின் மூலம் இயக்குநராகியுள்ள ரேவதி சுரேஷ் விரைவில் திரைப்படத்தையும் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.