தீபாவளி பண்டிகைக்கு மக்கள் பலர் தங்களின் பொழுதுபோக்கிற்காக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் இடங்களுக்கும் சென்று கொண்டாடினர்.
அதில் முக்கியமான பொழுதுபோக்கு அம்சமாக திரைப்படங்கள் இருந்தது. திரைக்கு வந்த புத்தம்புதிய திரைப்படங்களை கண்டு தங்களது தீபாவளியை கொண்டாடிய மக்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்.
இதில் மதுரையில் உள்ள சென்ட்ரல் சினிமாஸ் புதிதாக ஒரு முயற்சி மேற்கொண்டுள்ளது. அது என்னவென்றால், எம்.ஜி.ஆர். நடிப்பில் 51 ஆண்டுகளுக்கு முன் வெளியான 'ரிக்க்ஷாகாரன்' திரைப்படத்தின் சிறப்பு காட்சியை திரையிட்டது.
மதுரையின் பழமைவாய்ந்த திரையரங்கான சென்ட்ரல் சினிமாஸில், தற்போது 1960 மற்றும் 1970களில் வெளியான எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. இதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
அந்த வகையில், தீபாவளியை முன்னிட்டு 1971ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான 'ரிக்க்ஷகாரன்' திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது.
திரைப்படத்தைக் காண வந்த மக்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் எம்.ஜி.ஆர். பாடல்கள் ஒளிக்கப்பட்டது. அதன்பின் தன்னிலை மறந்த ரசிகர்கள் சாலையில் குத்தாட்டம் போடத் தொடங்கினர்.
51 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான திரைப்படத்தைக் காண மக்கள் ஆர்வம் காட்டியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil