நான் பண்ணது தப்பு, திரும்பவும் சேர்ந்து வாழலாம்; கெஞ்சிய கணவரை வேண்டாம்னு சொல்லிட்டேன்: ரிஹானா ஓபன் டாக்!

நடிகை ரிஹானா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது முன்னாள் கணவர் மீண்டும் சேர்ந்து வாழலாம் என்று கூறியதாகவும் ஆனால் நான் அதை மறுத்துவிட்டதாகவும் கூறினார்.

நடிகை ரிஹானா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது முன்னாள் கணவர் மீண்டும் சேர்ந்து வாழலாம் என்று கூறியதாகவும் ஆனால் நான் அதை மறுத்துவிட்டதாகவும் கூறினார்.

author-image
WebDesk
New Update
rihana

சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ரிஹானா அவ்வப்போது சினத்திரை நட்சத்திரங்கள் பிரச்சனை குறித்து தனது கருத்துக்களை பதிவு செய்வார். அந்த வகையில் நடிகர் விஷ்ணுகாந்த் – சம்யுக்தா, சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் இடையேயான பிரச்சனைகளுக்கு கருத்து தெரிவித்து இருந்தார், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ராஜியின் சித்தி கேரக்டரில் நடித்து வந்த ரிஹானா ஒரு கட்டத்தில் இந்த சீரியலில் இருந்து விலகினார். 

Advertisment

பிரபல சின்னத்திரை நடிகை ரிஹானா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பப் பிரச்சினைகள் மற்றும் நிதி நெருக்கடிகள் குறித்து வெளிப்படையாக டெலி விகடனுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். நடிகையாகப் பல தொடர்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்துப் பிரபலமான இவர், தனது வாழ்வில் சந்தித்த துயரங்களைப் பற்றி மனமுருகப் பகிர்ந்துகொண்டார்.

ரிஹானா தனது பேட்டியில், தனது முன்னாள் கணவருடனான உறவு குறித்து விரிவாகப் பேசினார். கணவர் தன்னை மற்றும் குழந்தைகளை விட்டுப் பிரிந்து சென்றதால் தான் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும், இது நிதி நெருக்கடிகளை உருவாக்கியதாகவும் தெரிவித்தார். இந்தத் துரோகங்கள் மற்றும் ஏமாற்றங்கள் காரணமாக, ஒரு கட்டத்தில் தற்கொலைக்குக்கூட முயன்றதாகக் கண்ணீருடன் குறிப்பிட்டார்.  

நடிப்பதைத் தவிர, வாழ்வாதாரத்திற்காகச் செவிலியர் மற்றும் மெஸ் சர்வீஸ் போன்ற பல வேலைகளைச் செய்ததாக ரிஹானா  தெரிவித்தார். தொழில் வாழ்க்கையில் சந்தித்த ஏமாற்றங்களைப் பற்றியும் தெரிவித்தார். சமீபத்தில், தனது மகளின் பள்ளி கட்டணத்திற்காக முன்னாள் கணவரிடம் உதவி கேட்டபோது, அவர் ரூ.35,000 கொடுத்ததாக ரிஹானா குறிப்பிட்டார். மேலும் தனது முன்னாள் கணவர் நான் செய்தது தவறு மன்னித்துவிடு, மீண்டும் நாம் சேர்ந்து வாழலாம்' என்று அவர் கெஞ்சியதாகவும், ஆனால் தான் அதை உறுதியாக மறுத்துவிட்டதாகவும் ரிஹானா தெரிவித்தார்.

Advertisment
Advertisements

தனக்கு ஒரே ஒருமுறை மட்டுமே திருமணம் நடந்ததாகவும், இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். தன்னைப்பற்றி "இரண்டாவது கணவர்" என்று குறிப்பிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீண்டு வர தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவுதான் முக்கியக் காரணம் என ரிஹானா நன்றி தெரிவித்தார். குறிப்பாக, தனது சக நடிகைகளான வைஷு மற்றும் ஜனனி ஆகியோரின் ஆதரவை அவர் மனதாரப் பாராட்டினார். 

Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: