காந்தாரா படத்தில் சிவா வில்லன் தான், ஹீரோ இல்லை; 3 ஆண்டுக்கு பின் உண்மை உடைத்த ரிஷப் ஷெட்டி!

காந்தாரா படத்தின் சாப்டர் 1 திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலில் வெளியான காந்தாரா படத்தில் சிவா கேரக்டர் ஹீரோ இல்லை, வில்லன் என்று ரிஷப் ஷெட் கூறியுள்ளார்.

காந்தாரா படத்தின் சாப்டர் 1 திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலில் வெளியான காந்தாரா படத்தில் சிவா கேரக்டர் ஹீரோ இல்லை, வில்லன் என்று ரிஷப் ஷெட் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Kantharan Chaptar 1

கடந்த 2022ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான காந்தாரா திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், இந்த படத்தின் 2-ம் பாகம் தற்போது தயாரிகியுள்ளது, இந்த படம் வரும் அக்டோபர் 2-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் இயக்குனர் மற்றும் ஹீரொ ரிஷப் ஷெட்டி படம் குறித்து பேசியுள்ளார்.

Advertisment

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: 

காந்தாரா திரைப்படம், ஆரம்பத்தில் கர்நாடகத்தில் மட்டுமே வெளியானது. அந்த படத்திற்கு கிடைத்த பாராட்டுக்கள் மற்றும் மக்களின் ஆதரவு காரணமாக பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டது. உலகளவில் சுமார் ரூ408 கோடி வசூலித்து சாதனை படைத்தது. மேலும், அப்படத்தில் நடித்ததற்காக ரிஷப் ஷெட்டி சிற்நத நடிகருக்கான தனது முதல் தேசிய விருதை வென்றார்.

காந்தாரா படம் பெரிய வெற்றிதான் என்றாலும் இந்த படத்தில், பெண்கள் கேரக்டர்கள் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்தும், ஹீரோ கேரக்டர்  அவர்களிடம் நடந்துகொண்ட விதம் குறித்தும் கடும் விமர்சனங்களை சந்தித்தது. திரைப்படத்தில் ஹீரோ கேரக்டரான சிவாவின் (ரிஷப் ஷெட்டி) நடத்தை குறித்து பலரும் கடுமையான விமர்சனங்களை எழுப்பி இருந்தனர். அவர் தனது காதலி லீலாவை (சப்தமி கவுடா) தவறாக நடத்தியதாகவும், அவளைப் பின்தொடர்வது (stalking) மற்றும் பொருத்தமற்ற முறையில் தொடுவது போன்ற காட்சிகள் 'காதல்' என்ற போர்வையில் காட்டப்பட்டதாகவும் விமர்சிக்கப்பட்டது.

இந்த விமர்சனங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ரிஷப் ஷெட்டி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார். முன்னணி கேரக்டர் வில்லனாகவே சித்தரிக்கப்பட்டதாகவும், ஹீரோவாக அல்ல என்றும் அவர் தற்போது கூறியுள்ளார். தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியாவுக்கு ரிஷப் ஷெட்டி அளித்த பேட்டியில் "அந்தத் திரைப்படம் சிவாவைப் பற்றியது. வேறு யாரையும் பற்றியது அல்ல. சிவா ஒரு ஹீரோ அல்ல - அவன் ஒரு வில்லன். அவனுடைய கேரக்டர் குறைபாடுகள் நிறைந்தது. 

Advertisment
Advertisements

அவனது நடத்தை கேள்விக்குரியது, அவனது மொழி மோசமானது, அவனிடம் எல்லா கெட்ட பழக்கங்களும் உள்ளன. சமூகத்தின் எதிர்பார்ப்புகளை, குறிப்பாக தெய்வீக நடனக் கலைஞரான அவனது தந்தையின் மரபுக்குரிய எதிர்பார்ப்புகளை அவன் நிறைவேற்றவில்லை. அந்தக் கதை அவனது மாற்றத்தைப் பற்றியதுதான். அதேபோல், அந்தப் படத்தில் மற்ற அனைவரும் துணைக் கதாபாத்திரங்கள் தான். ஆனால், அப்படியிருந்தும், சிவாவின் அம்மா கேரக்டர் வலுவாக இருந்தது.

அவள் அவனது வாழ்க்கையில் ஒரு அச்சமூட்டும் சக்தியாக இருந்தாள். இது ஏன் அபத்தமாகப் பார்க்கப்படுகிறது என்று எனக்குப் புரியவில்லை. நான் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன், ஆனால் சிவாவின் ஆளுமைதான் (aura) மற்றவர்களை மறைத்துவிட்டது –அது நோக்கத்துடன் செய்யப்பட்டதுதான். இந்தக் கருத்துக்களிலிருந்து நான் நிறைய கற்றுக்கொள்கிறேன். அவை எனக்குப் பல நேரங்களில் புதிய யோசனைகளைக் கொடுக்கின்றன," என்று அவர் ஒப்புக்கொண்டார்.

அடுத்து வெளியாக உள்ள காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் முற்றிலும் வேறொரு கதைக்களம் (setup). இது காந்தாராவை விடவும் வலிமையானதாகவும், ஆழமானதாகவும் இருக்கும். ஒருவேளை அந்தக் கேரக்டருடன் ஒரு தொடர்ச்சிப் படம் (sequel) எடுத்தால், அதில் இந்தக் கூறுகளை மீண்டும் பயன்படுத்தலாம்," என்று விளக்கினார்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: