/indian-express-tamil/media/media_files/2025/09/23/kantara-1-2025-09-23-14-42-01.jpg)
காந்தாரா படம் பார்க்க போறீங்களா? அப்போ இந்த விதிமுறைகள் உங்களுக்கும் தான்: அதிர்ச்சி தரும் அறிக்கை பற்றி ரிஷப் ஷெட்டி விளக்கம்!
நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி நடித்த திரைப்படம் ‘காந்தாரா’. ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ‘காந்தாரா’ திரைபடம் கடந்த 2022-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது.
முதலில் கன்னடத்தில் மட்டும் வெளியான இப்படம் அடுத்ததாக அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ரூ.16 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவால் ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
‘காந்தாரா’ திரைப்படம் முதலில் சீக்குவலாக வெளியான நிலையில் தற்போது அப்படத்தின் ப்ரீக்குவல் வெளியாகவுள்ளது. அதாவது ‘காந்தாரா 1’ பாகம் வெளியாகவுள்ளது. இந்த பாகத்தின் ரிலீஸிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
’காந்தாரா 1’ திரைப்படம் அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. பழங்குடியினருக்கும் மன்னருக்குமான நில உரிமை பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் ‘காந்தாரா’ படக்குழு வெளியிட்டதாக ஒரு போஸ்டர் வைரலாகி வந்தது. அதில், ’காந்தாரா சாப்டர் 1’ படத்தை பார்ப்பதற்கு பார்வையாளர்கள் மூன்று தெய்வீக செயல்முறைகளை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதாவது, மது அருந்தக் கூடாது, புகைப் பிடிக்கக் கூடாது அசைவம் சாப்பிட்டிருக்கக் கூடாது. திரையரங்குகளில் இப்படத்தை பார்க்கும் வரை இந்த மூன்று காரியங்களையும் செய்யக் கூடாது என்று அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த செயல்முறையில் பங்கேற்று அதற்கான சான்றிதழைப் பெறுவதற்கான ஒரு கூகுள் படிவமும் அத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்ததுடன் கிண்டல் செய்யவும் ஆரம்பித்துவிட்டனர்.
ஆனால், இந்த போஸ்டர் ‘காந்தாரா’ படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனமும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இந்நிலையில், ’காந்தாரா 1’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இந்த போஸ்டர் குறித்து நடிகர் ரிஷப் ஷெட்டியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
One wrong post overshadowed everything which team @KantaraParva did for promoting KANTARA , feeling bad for them...
— RAJA KRISHNAPPA BAIRYA (@RKBTweetss) September 22, 2025
.@shetty_rishab#KantaraChapter1#Kantarapic.twitter.com/D58EoPo48i
அதற்கு அவர், “அந்த போலி போஸ்டரை முதலில் பார்க்கும் பொழுது எங்களுக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. ஒரு போலியான விஷயத்திற்கு ஏன் விளக்கமளிக்க வேண்டும் என்றே நாங்கள் எதுவும் சொல்லவில்லை. உணவு என்பது அவரவர் உரிமை மற்றும் விருப்பம் சார்ந்தது. யாரோ கவனம் ஈர்ப்பதற்காக இவ்வாறு செய்துள்ளனர். இதற்கும் ‘காந்தாரா’-விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.