”நான் நடிக்கும்போது நீ இல்லையேம்மா!”: பிரியாவாரியர் கண்ணசைவுக்கு மயங்கிய ரிஷி கபூர்

இந்நிலையில், பாலிவுட்டின் மூத்த நடிகரும், காதல் இளவரசர் என புகழப்படும் ரிஷி கபூரும் பிரியா வாரியரின் கண்ணசைவுக்கு மயங்காமல் இல்லை.

2018-ஆம் ஆண்டின் இணைய ஹாட் சென்சேஷன் பிரியா பிரகாஷ் வாரியர்தான். அவரை தெரியாதவர்கள் நிச்சயம் இருக்க முடியாது. ‘ஜிமிக்கி கம்மல்’ புகழ் ஷெரிலுக்குப் பிறகு பிரியா பிரகாஷ்தான் இளைஞர்களின் ஹாட் சென்சேஷன். விரைவில் வெளிவரவிருக்கும் ’ஒரு அடார் லவ்’ மலையாள திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ’மணிக்ய மலரய பூவி’ பாடலில், பிரியா பிரகாஷ் கண் அசைவுகள் அனைவரது உள்ளத்தையும் கொள்ளையடிக்கும் விதமாக இருந்தது.

கூகுளில் சன்னி லியோன், தீபிகா படுகோனேவைவிட பிரியா வாரியரைத்தான் அதிகமானோர் தேடினர். இந்நிலையில், பாலிவுட்டின் மூத்த நடிகரும், காதல் இளவரசர் என புகழப்படும் ரிஷி கபூரும் பிரியா வாரியரின் கண்ணசைவுக்கு மயங்காமல் இல்லை.

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”பிரியா வாரியர், இந்த பெண்ணுக்கு சிறந்த நட்சத்திர அந்தஸ்து கிடைக்கும் என நினைக்கிறேன். நன்றாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவராகவும், குழந்தைத்தனமாகவும், இருக்கிறார். என் இனிய பிரியா, உன் வயதையொத்தவர்களுக்கு நீ கடும் போட்டியாக இருக்க போகிறாய். கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும். சிறந்ததே கிடைக்கட்டும். நான் நடித்துக் கொண்டிருக்கும்போது நீ வரவில்லையே?”, என ரிஷி கபூர் தெரிவித்துள்ளார்.

ரிஷி கபூரின் இந்த பாராட்டுக்கு பிரியா வாரியர் தன் ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

×Close
×Close