Advertisment
Presenting Partner
Desktop GIF

பிரதர் நான் ஏற்கெனவே ஒருவரை காதலிக்கிறேன்: சீரியல் நடிகை கொடுத்த புது ட்விஸ்ட்

raja rani 2 actress Riya gives reply to fan in instagram conversation Tamil News: 'பிரதர் நான் ஏற்கெனவே ஒருவரை காதலிக்கிறேன்' என்று கூறி ரசிகருக்கு ட்விஸ்ட் கொடுத்துள்ளார் ராஜா ராணி 2 நடிகை ரியா.

author-image
WebDesk
New Update
Riya Vishwanathan reply to fan’s question in insta

Riya Vishwanathan

Riya Vishwanathan Tamil News:  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பை பெற்ற சீரியல் ராஜா ராணி. இந்த சீரியலில் நடிகை ஆல்யா மானசாவும் நடிகர் சஞ்ஜீவும் ஜோடியாக நடித்தனர். இருவரும் சீரியலில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தை கடந்த 2020 ஆம் ஆண்டு பிறந்தது. மற்றும் மகன் கடந்த மாதத்தில் பிறந்தார்.

Advertisment

ராஜா ராணி சீரியலுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, விஜய் டிவியில் ராஜா ராணி சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் சந்தியா ஐஏஎஸ் அதிகாரியாக விரும்பி எதிர்பாராதவிதமாக சரவணனை திருமணம் செய்து கொள்கிறார். சரவணன் திருமணத்திற்குப் பிறகு சந்தியாவின் லட்சியத்தை உணர்ந்து அவளது கனவை விவேகத்துடன் அடைய உதவுகிறான் என்பது தான் மையக்கதை.

இதில் நாயகியாக சந்தியாவாக ஆல்யா மானசாவும், நாயகன் சரவணனாக சித்துவும் நடித்து வந்த வந்தனர். சீரியல் ரசிகர்களும் வழக்கம் போல் தங்களின் ஏகோபித்த ஆதரவை வழங்கி வருகின்றனர். இதற்கிடையில், இரண்டாவது சீசனில் ஆல்யா தனது இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். இதனால் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அந்த ரோலில் ரியா விஸ்வநாதன் என்பவர் தற்போது நடித்து வருகிறார்.

publive-image

ரியா கொடுத்த புது ட்விஸ்ட்

ராஜா ராணி சீசன் 2ல் சந்தியாவாக நடித்து வரும் நடிகை ரியா விஸ்வநாதனுக்கு சின்னத்திரையில் முதல் சீரியல். முன்னதாக இவர் மாடலிங் செய்து வந்தார். மேலும், சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது போட்டோ ஷுட்கள் உள்ளிட்ட புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், ரியா தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுடன் சமீபத்தில் கலந்துரையாடி இருந்தார். அப்போது ரசிகர் ஒருவர், 'இவ்வளவு அழகாக உள்ளீர்களே உங்களை எப்படி கரெக்ட் செய்வது' என கேட்டுள்ளார். அதற்கு அவர், 'பிரதர் நான் ஏற்கெனவே ஒருவரை காதலிக்கிறேன்' என்று கூறி அந்த ரசிகருக்கு ட்விஸ்ட் கொடுத்துள்ளார்.

publive-image

ஆனால், ரியாவின் காதலர் பாக்கியலட்சுமி தொடரில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால் என கூறப்படுகிறது. மேலும், ரசிகர்கள் இவர்கள் இருவரையும் வைத்து கிசுகிசுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Entertainment News Tamil Serial Actress Raja Rani 2 Vijay Tv Serial 2 Raja Rani 2 Serial Raja Rani Serial Actress Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment