புதிய அரசியல் கட்சி, தனி கொடி அப்படி இப்படினு எதிர்ப்பார்த்த போது இதுயெல்லாமே படத்திற்கான புரமோஷன் என்று நேற்று ஆர். ஜே பாலாஜி கொடுத்த பல்பு தான் டாக் ஆஃப் தமிழ் சினிமா.
ரேடியோ ஜாக்கியாக இருந்து, மெல்ல மெல்ல திரைப்படங்களில் முகம் காட்டி, காமெடி நடிகராக மாறி, சமூக ஆர்வலராக தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு கடைசியில் மே 18 ஆம் தேதி அரசியலுக்கு வர இருப்பதாக ஷாக் கொடுத்தவர் தான் ஆர். ஜே பாலாஜி.
ஆர்.ஜே. பாலாஜி அரசியலில் இறங்கப் போவதாகவும், தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் சில நாட்களுக்கு முன்பு தகவல் ( போஸ்டர், பேனர், கட் அவுட்) வெளியானது. ‘ஒருவேளை உண்மையாக இருக்குமோ...’ என ஒருகட்டத்தில் சந்தேகமும் எழுந்தது. ஏனென்றால் விளம்பரங்களில் வந்த கொடி சின்னத்தை பாலாஜி தனது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் ப்ரோஃபைல் ஆக வைத்தார்.
ஒருபக்கம் ரஜினி , கமல், இதற்கு நடுவில் பிக் பாஸ் ஜூலி வேற விரைவில் அரசியலில் வர இருப்பாதாக கூறி வீடியோவை வெளியிட்டு தமிழக மக்களின் பொறுமையை சோதித்தார். இதற்கிடையில் தான் மே 18 ஆம் தேதி அரசியல் குறித்த அறிவிப்பு வரும் ஆர். ஜே பாலாஜி அறிவித்தம் நெட்டிசன்கள் கலாய்த்து தள்ள ஆரம்பித்தனர்.
இந்நிலையில் தான், கடந்த 17 ஆம் தேதி ஆர். ஜே பாலாஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “நாளை (18.5.18) இரவு 7:00 மணியளவில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டம் தொடங்கும் போது, எனது அடுத்தகட்ட பயணம் குறித்து கிரிக்கெட் வீரர்கள் அறிவிப்பார்கள்” என்று தெரிவித்தார்.
அதேபோல் நேற்று இரவு 7:00 மணியளவில் தான் அடுத்து நடிக்க இருக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்தபடம் அரசியல் காமெடி படம் என்று உறுதியாகியுள்ளது.
,
LKG’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை பிரபு இயக்குகிறார். ஆர்.ஜே.பாலாஜி முதல்முறையாக ஹீரோவாக நடிக்கும் இந்த படத்திற்கு இப்படி ஒரு புரோமோஷன் தேவையா? என்கின்றனர் கோலிவுட் வட்டாரங்கள். போனது போகட்டும் ஆர். ஜே பாலாஜி அரசியலில் வரவில்லை என்பது உறுதியாகி விட்டது.
,
இன்னும் லிஸ்டில் இருப்பது பிக் பாஸ் ஜூலி மட்டுமே. அவர் என்ன சொல்ல போகிறார் என்பதை ஆவலுடன் எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர் நெட்டிசன்கள்.. (வேற எதுக்கு மீம்ஸ் போட தான்).