முன்னாள் அரசியல் பிரமுகர் நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுவதாக நடிகர் ஆர்.ஜே. பாலாஜி கலங்கியபடி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் எல்.கே.ஜி. இந்தத் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
நாஞ்சில் சம்பத் பற்றி ஆர்.ஜே. பாலாஜி உருக்கம்
இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர் உட்பட, பலரும் பங்கேற்றனர். அப்போது இந்த சந்திப்பில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி நாஞ்சில் சம்பத்தின் வறுமை நிலையைப் பற்றி கலங்கியவாறு பேசினார்.
Advertisment
Advertisements
அப்போது பேசிய அவர், “இரண்டு பேருக்கு ரொம்பவே நன்றி சொல்லணும்னு தோணுது. ராம்குமார் சார். அவர், நடிகர் பிரபு சாரின் அண்ணன். மிகப்பெரிய பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனா, பந்தா எதுவும் இல்லாம பழகினார். எனக்குத் தெரிந்து அறுவடைநாள், ஷங்கரின் ‘ஐ’ படங்களில்தான் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும்படி அவரிடம் கேட்டேன்.
உடனே அவர், ‘உனக்காக நடிக்கிறேன்’னு சொல்லி ஒத்துக்கிட்டார். பிரமாதமாவும் நடிச்சுக் கொடுத்தார். தவிர, ராம்குமார் சார், நல்லா இங்கிலீஷ் பேசுவார். இதுலயும் நிறைய இங்கிலீஷ் டயலாக்கெல்லாம் பேசியிருக்கார்.
அடுத்து நன்றிக்குரிய மனிதர், நாஞ்சில் சம்பத் சார். இந்தப் படத்துல அவர் நடிச்சா நல்லாருக்கும்னு அவருக்கு போன் பண்ணிட்டு அவர் வீட்டுக்குப் போனேன். சென்னை பட்டினப்பாக்கத்துல, ஹவுஸிங்போர்டுல வீடு. 600 சதுர அடி வீடு அது.
அந்த வீட்டைப் பாக்கும்போதே ஒருமாதிரியா இருந்துச்சு. அவர்கிட்ட கதையெல்லாம் சொல்லிட்டு, ‘படத்துல எனக்கு அப்பாவா நடிக்கணும் சார்’னு சொன்னேன்.