கோவை புரூக்பாண்ட் சாலையில் அமைந்துள்ள "புரூக் ஃபீல்டு மாலில்" உள்ள திரையரங்கில் சொர்க்கவாசல் திரைப்படம் நேற்று திரையிடப்பட்டுள்ளது. அப்படத்தின் கதாநாயகன் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் பட குழுவினர் நேற்று மாலை காட்சியினை மக்களோடு மக்களாக அமர்ந்து திரைப்படத்தை கண்டு களித்தனர்.
நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜி திரைப்படம் முடிந்ததை அடுத்து திரைப்படத்தை காண வந்த பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.
படம் எப்படி உள்ளது, தனது நடிப்பு எவ்வாறு உள்ளது, படம் பிடித்துள்ளதா எனக் கேட்டறிந்தார். அனைவரும் படத்திற்கு நல்லதொரு வரவேற்பை கொடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கின்றது என தெரிவித்தார்.
மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தான் ஆர்.ஜே. பாலாஜி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடிகர் சூர்யாவை வைத்து இயக்குகின்ற புதிய படத்திற்கான பூஜை செய்தார். தொடர்ந்து அப்படத்தின் காட்சிகள் கோவை மாநகர பகுதிகளில் பதிவு செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“