விஜயகாந்தை நேரில் பார்க்க முடியவில்லை; இயக்குனர் ஆர்.கே.செல்வமணி

விஜயகாந்த் உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் – நடிகர் நாசர்; நேரில் பார்க்க முடியவில்லை – ஆர்.கே.செல்வமணி; மியாட் மருத்துவமனையில் பேட்டி

விஜயகாந்த் உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் – நடிகர் நாசர்; நேரில் பார்க்க முடியவில்லை – ஆர்.கே.செல்வமணி; மியாட் மருத்துவமனையில் பேட்டி

author-image
WebDesk
New Update
Vijayakanth

விஜயகாந்த் உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் – நடிகர் நாசர்

தே.மு.தி.க தலைவரும் நடிகருமான விஜயகாந்தை நடிகர் சங்கத் தலைவர் நாசர், பெப்சி யூனியன் தலைவரும் இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி ஆகியோர் மியாட் மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

Advertisment

நடிகரும் தே.மு.தி.க கட்சியின் தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபகாலமாகவே விஜயகாந்த்க்கு உடல்நலப் பிரச்சனைகள் இருந்து வருகிறது.

இந்த நிலையில் விஜயகாந்துக்கு கடந்த 18 ஆம் தேதி மாலை திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கடுமையான சளி, காய்ச்சல், இருமல் இருந்ததால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவருக்கு மூச்சுவிடுவதிலும் சிரமம் இருந்தது. இதையடுத்து நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் அவருக்கு நுரையீரலுக்கு சிகிச்சை அளிக்க 14 நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் தொண்டர்களும் ரசிகர்களும் வேதனை அடைந்தனர். சில நாட்களுக்கு முன்னர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, பிரேமலதா வீடியோ ஒன்றை வெளியிட்டு, கேப்டன் நலமாக இருக்கிறார். அவர் வீடு விரைவில் திரும்புவார், நம்மை எல்லாம் சந்திப்பார். அதுவரை எந்த வதந்திகளையும் நம்பாதீர்கள். மருத்துவமனை அறிக்கை என்பது வழக்கமான ஒன்றுதான் என தெரிவித்திருந்தார்.

Advertisment
Advertisements

இந்த நிலையில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், ஃபெப்சி தலைவரும் திரைப்பட இயக்குனருமான ஆர்.கே. செல்வமணி உள்ளிட்ட பல பிரபலங்கள் மியாட் மருத்துவமனைக்கு நேரில் சென்று விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்தனர். மேலும் உடல்நிலை குறித்து விஜயகாந்தின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சங்க தலைவர் நாசர், “விஜயகாந்த் நல்லாயிருக்கார். எல்லா புலன்களும் செயல்படுகின்றன. அவரது உடல்நிலை குறித்த செய்திகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டதுதான். தலைமை மருத்துவரை சந்தித்தோம். அவரும் விஜயகாந்த் நன்றாக இருப்பதாக தெரிவித்தார். தயவு செய்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம். இரு மாதங்களுக்கு முன்பு எப்படி இருந்தாரோ அப்படித்தான் இப்பவும் இருக்கிறார். அதனால் கேப்டன் திரும்ப வருவார். நம்முன் தோன்றுவார். நம்முடன் பேசுவார்” என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, “மருத்துவ விதிமுறைகள் காரணமாக விஜயகாந்தை பார்க்க முடியவில்லை. அவருக்கு வெண்டிலேசன் பொருத்தப்படவில்லை. விஜயகாந்த் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்,” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Vijayakanth R K Selvamani

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: