தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்னம், முன்னணி நடிகர் கமல்ஹாசன், இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், படம் குறித்து கமல்ஹாசன் பேசிய நேர்காணல் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இரண்டு ஜாம்பவான்களான மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இருவரும் 1987-ம் ஆண்டு வெளியான நாயகன் படத்தில் இணைந்து பணியாற்றினர். இந்த படம் இன்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன்பிறகு இருவரும் இணைந்து பணியாற்றாத நிலையில், தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தக் லைஃப் என்ற படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது,
பாப் கலாச்சாரத்தில் இந்த திரைப்படத்தின் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதால், அதன் நாயகன் படத்தின் வரும் ஐகான் வசனமான "நீங்க நல்லவரா கெட்டவரா?" என்பது தற்போது பலரும் அவர்களின் நிஜ வாழ்க்கையிலும் பயன்படுத்தி வரும் பிரபலமான வசனமாக மாறியுள்ளது, இதனிடையே, சமீபத்தில், தக் லைஃப் திரைப்படத்தில் அவரது கேரக்டர் குறித்து கமல்ஹாசிடம் ரங்கராய சக்திவேல் நாயக்கர் ஒரு நல்லவரா கெட்டவரா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
Advertisment
Advertisements
இதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், படத்தைப் பற்றி அதிகம் சொல்லாமல், குறிப்பாக தயாரிப்பாளர்கள் அதன் கதைக்களம் பற்றிய பெரும்பாலான விவரங்களை மறைத்து வருவதால், தனது கேரக்டரின் சிக்கலான அடுக்குகளை சுட்டிக்காட்டும் ஒரு ஒப்புமையுடன் பதிலளித்தார். இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) ஏற்பாடு செய்த ஒரு நிகழ்வின் போது, படம் பற்றி கேட்டபோது, கமல், படம் பற்றி எதையும் வெளியிடுவது மணிரத்னத்தை வருத்தப்படுத்தும் என்று கூறினார்.
நாயகனைப் போலவே, தக் லைஃப் படமும் அதன் கதாநாயகன் நல்லவரா கெட்டவரா என்பது குறித்து பார்வையாளர்களை நிச்சயமற்றவர்களாக மாற்றக்கூடும் என்று நிகழ்வில் கலந்து கொண்ட அவரது சக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் குறிப்பிட்டபோது, கமல் அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டு, "அவர் (ரங்கராய சக்திவேல் நாயக்கர்) நல்லது மற்றும் தீமை இரண்டின் கலவை. கணிதத்திற்கு எது முக்கியம்: பிளஸ் அல்லது மைனஸ்?" என்று அவர் தரப்பில் இருந்து கேள்வி எழுப்பினார். அவரது சிந்தனையைத் தூண்டும் ஒப்புமை பார்வையாளர்களை வாயடைக்கச் செய்தது.
தக்லைஃப் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து, சிலம்பரசன், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், அபிராமி மற்றும் நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை, ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு மற்றும் ஏ. ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.