/indian-express-tamil/media/media_files/2025/08/15/robert-master-2025-08-15-15-25-20.jpg)
நடன இயக்குநர் மற்றும் சண்டை பயிற்சியாளர் ஆண்டனி மற்றும் ஓமனா தம்பதியரின் மகனான நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர், தனது தனிப்பட்ட வாழ்வில் ஒரு சோகமான அத்தியாயத்தை எதிர்கொண்டதாக அவரது தந்தை இண்டியாக்ளிட்ஸ்க்கு அளித்த பேட்டியில் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
ராபர்ட் மாஸ்டர், நடன இயக்குநர் மற்றும் சண்டை பயிற்சியாளர் ஆண்டனி மற்றும் ஓமனா ஆகியோரின் மகன் ஆவார். அவரது பெற்றோர் தமிழ் திரையுலகில் நன்கு அறியப்பட்டவர்கள். ராபர்ட் தனது வாழ்க்கையை ஒரு குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கி, பல படங்களில் நடித்துள்ளார். ராபர்ட்டின் தந்தை ஆண்டனியும் தமிழ் திரையுலகில் பிரபலமான நடன இயக்குநர் மற்றும் சண்டை பயிற்சியாளர் ஆவார். அவர் நடன இயக்குநர் ஓமனாவின் கணவரும், நடிகை அல்போன்சாவின் தந்தையும் ஆவார். ராபர்ட்டின் தாயார் சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
இந்நிலையில் தனது மகனின் வாழ்க்கை குறித்து ராபர்ட்டின் தந்தை கூறியுள்ளார். நேர்காணலில், ராபர்ட்டின் தந்தை தனது மகனின் காதல், திருமணம், மற்றும் பிரிவைப் பற்றி மனம் திறந்து பேசினார். தனது மகன் 18 வயதில் ஒரு பெண் நடனக் கலைஞரைக் காதலித்ததாகவும், அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்தபோது ஒரு குழந்தை பிறந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். துரதிர்ஷ்டவசமாக, அந்தக் குழந்தைக்கு இரண்டு வயது இருக்கும்போது, ராபர்ட்டும் அவரது மனைவியும் பிரிந்துவிட்டனர்.
இந்தச் சம்பவம் ராபர்ட் குடும்பத்திற்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பிரிவுக்குப் பிறகு, ராபர்ட்டின் குடும்பத்தினர் அந்த குழந்தையை மீண்டும் சந்திக்கவே இல்லை என்று அவரது தந்தை கூறினார். ராபர்ட்டும் தனது குழந்தையை அடிக்கடி பார்த்தது இல்லை. எதிர்பாராதவிதமாக ஒரு நாள் சந்தித்துள்ளார். அப்போது நடந்த ஒரு சங்கட்டமான சூழ்நிலையைத்தான் ராபர்ட்டின் அப்பா கண்ணீர் மல்க விவரிக்கிறார்.
ஒருமுறை, ராபர்ட் தனது காரில் சென்றுகொண்டிருந்தபோது, தனது முன்னாள் மனைவியையும், மகளையும் ஸ்கூட்டரில் பார்த்துள்ளார். அப்போது, ராபர்ட்டின் முன்னாள் மனைவி, அவருடன் பேசி இருந்துவிட்டு செல்லும்போது குழந்தையிடம் "மாமாவுக்கு குட்பை சொல்லு" என்று கூற, இதைக் கேட்ட ராபர்ட் கண்ணீர் விட்டு அழுதார். இந்த நிகழ்வை நினைவுகூர்ந்த ராபர்ட்டின் தந்தை, உணர்ச்சிவசப்பட்டு தானும் கண்ணீர் சிந்தினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.