/indian-express-tamil/media/media_files/2025/08/02/robert-master-mother-passed-away-vanitha-vijaya-kumar-jovika-mourns-video-tamil-news-2025-08-02-12-16-49.jpg)
நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் அம்மா நேற்று வெள்ளிக்கிழமை திடீர் மரணமடைந்த நிலையில், காலில் கட்டுடன் ராபர்ட் மாஸ்டர் நடனமாடிய மற்றும் நடிகை வனிதா விஜயகுமார் கண்ணீர் மல்க அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குநராக இருப்பவர் ராபர்ட் மாஸ்டர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர் தற்போது மம்முட்டியின் மகனாக அழகன் படத்தில் நடித்திருந்தார். பின்னர் சத்யராஜின் மாறன் படத்திலும், டான்சர் ஆகிய படத்தில் நடித்தார். டான்சர் படத்தில், ஊனமுற்ற நடனக் கலைஞராக நடித்து கவனம் ஈர்த்தார் ராபர்ட்.
இந்தியாவின் மைக்கில் ஜாக்சன் எனப் புகழப்படும் நடிகர் பிரபு தேவாவின் டான்ஸ் குரூப்பில் இணைந்த ராபர்ட், அவரது படங்களில் வரும் பாடல்களுக்கு நடனமாடினார். அவர் போடா போடி படத்தில் பணியாற்றியதற்காக ராபர்ட் சிறந்த நடன இயக்குனருக்கான விஜய் டிவி விருதை வென்றார். தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அனைவரையும் டார்லிங் டார்லிங் என அழைத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அத்துடன், நடிகை ரட்சிதாவை இவர் சுற்றி சுற்றி வந்ததை அனைவரும் ரசித்து பார்த்தார்கள். இருப்பினும், ராபர்ட் மாஸ்டர் 100 நாள்கள் முழுவதுமாக பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியாமல் போய் வெளியேறினார். அண்மையில் அவர் வனிதா விஜயகுமார் இயக்கத்தில் ஜோவிகா விஜயகுமார் தயாரிப்பில் வெளியான 'மிஸ்ஸஸ் & மிஸ்டர்' ஹீரோவாக படத்தில் நடித்திருந்தார். 40 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ளும் கதைக் களத்தை கொண்ட இந்த படம், எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இதையடுத்த, இந்த படத்தை வனிதா தனது யூடியூப் சேனலில் வெளியிட்டார்.
இந்நிலையில், ராபர்ட் மாஸ்டரின் அம்மா நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். அவருடைய இறுதி ஊர்வலத்தில் ராபர்ட் மாஸ்டரே அழுதபடி நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. ராபர்ட் மாஸ்டர் தனது கால்களில் காயம் பட்டு இருந்த போதும், தனது அம்மாவிற்காக ஊர்வலத்தில் நடனமாடியுள்ளார். இதேபோல், ராபர்ட் மாஸ்டர் அம்மா மறைவின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார் மற்றும் அவரின் மகள் ஜோவிகா விஜயகுமார் கண்ணீர் மல்க அழுதது பார்ப்போரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தாயின் இறுதி ஊர்வலத்தில் கண்ணீருடன் ஆடிய #Robert Master !#Galattapic.twitter.com/t4udBD1aEH
— Galatta Media (@galattadotcom) August 1, 2025
தாயை இழந்த சோகத்தில் #Robert Master !#Galattapic.twitter.com/i0OyQQRTKP
— Galatta Media (@galattadotcom) August 1, 2025
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.