/indian-express-tamil/media/media_files/2025/08/16/download-2025-08-16-13-15-00.jpg)
தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளுக்கு பெயர் போன வனிதா விஜயகுமார் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் படம்தான் ‘மிஸ்ஸஸ் & மிஸ்டர்’ இந்த திரைப்படம் ஜூலை 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
வனிதா விஜயகுமார் கதை, திரைக்கதை எழுதி இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை அவரது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் ஸ்ரீமன், ஷகிலா, ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் ஆகியோர் துணை துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, விஷ்ணு ராமகிருஷ்ணன் மற்றும் ராஜபாண்டியின் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
மம்முட்டி நடித்த அழகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ராபர்ட், அதன் பின் ஒரு சில படத்தில் நடித்து வந்தார். டான்சர் படத்தில் ஊனமுற்றவராக நடித்து பெயர் எடுத்த ராபர்ட், பிரபு தேவாவின் டான்ஸ் குரூப்பில் சேர்ந்து பணியாற்றி வந்த நிவையில், போடா போடி படத்தில் நடன இயக்குநராக பணியாற்றினார். அதன் பின் ஒரு சில படத்தில் பணியாற்றிய இவர், விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.
ஒரு கட்டத்திற்கு மேல் பிரபுதேவா மாஸ்டரிடம் இருந்து விலகி வந்த ராபர்ட் மாஸ்டர் தனியாக படங்களுக்கு நடனம் அமைக்கத் தொடங்கினார். சிம்புவின் போடா போடி படத்திற்கு அவர் நடனம் அமைத்தது பாராட்டுகளை அவருக்கு ஈட்டிக் கொடுத்தது. இது மட்டும் இல்லாமல் அவருக்கு விருதுகளையும் பெற்றுக் கொடுத்தது.
நடிகை வனிதாவுடன் சில ஆண்டுகள் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ராபர்ட் மாஸ்டர், அவரின் உதவியால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் டார்லிங்... டார்லிங் என அனைவரையும் அழைத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இப்போது அவரிடம் ஒரு நேர்காணலில் அவர் வணித்தவுடன் படத்தில் நடித்த அனுபவத்தை கேட்ட போது அவர் கூறுகையில், "நான் ஜோவிகாவுக்காக தான் இந்த படத்தை செய்து கொடுத்தேன், வனிதாவிற்காக நான் செய்யவில்லை.
ஆனால் அது அப்படியே எனக்கே கேட்டதாக திரும்பியது. என்னை முதலில் இயக்குனராக தான் புக் செய்தார்கள். அனால் அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது வனிதா தான் எல்லாமே என்று.
என்னுடைய பாஸ்போர்ட் கூட தயாரிப்பாளரிடம் தான் இருந்தது. வனிதாவை பற்றி அனைவருக்கும் தெரியும். அவரை யாராலும் மாற்ற முடியாது. அதனால் வேறு வழி இல்லாமல் நானே மாறிக்கொண்டு அந்த படத்தை ஜோவிக்காவிற்காக செய்து கொடுத்தேன்" என்று கூறியுள்ளார்.
இந்த திரைப்படம் நிறைய சர்ச்சையான விமர்சனங்களை சந்தித்தது. அதற்கிடையில் ராபர்ட் மாஸ்டர் இப்படி ஓப்பனாக பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஒரு ஷாக்காக வந்து நிற்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.