/indian-express-tamil/media/media_files/2025/08/12/vanitha-robert-2025-08-12-13-18-30.jpg)
பிரபல நடன இயக்குநரும் நடிகருமான மாஸ்டர் ராபர்ட், கலட்டா பிங்க் சேனலுக்கு அளித்த ஒரு நேர்காணலில், தனது திரைப்பட அனுபவங்கள், குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றிய சில உணர்ச்சிபூர்வமான விஷயங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார். அண்மையில், மாஸ்டர் ராபர்ட்டின் தாயார் மறைந்த நிலையில் பேட்டி அளித்த அவர் தனது தாய் குறித்த பல விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார்.
தனது தாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாமல் போனது குறித்து ராபர்ட் மிகுந்த வருத்தத்துடன் பேசினார். அவர் இதைப் பற்றிப் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். இது அவர் தனது தாயின் மீது வைத்திருந்த ஆழமான பாசத்தைக் காட்டுகிறது. இந்த நிகழ்வு அவரது வாழ்க்கையில் ஒரு பெரிய வலியை ஏற்படுத்தியிருப்பதையும், இன்றும் அந்த வருத்தம் அவரை விட்டு நீங்கவில்லை என்பதையும் தெரிவித்தார்.
மேலும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் திரைப்படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்ததாகவும், 'இந்த வயதில் இது தேவையா?' என்று பலர் கேட்டதாகவும் ராபர்ட் குறிப்பிட்டார். இருப்பினும், படத்தின் கதை ஒரு அடல்ட் காமெடி என்பதைத் தாண்டி, பெண்களின் உணர்வுகளையும், அவர்களின் அன்றாடப் பிரச்சனைகளையும் பேசுவதாக அவர் கூறினார். தனது தாயாருக்கு கூட இந்த படத்தில் நடித்தது என்று அவர்க்கு பிடிக்கவில்லையாம். இருப்பினும் தனது தாயார் மறைந்தபோது, வனிதா விஜயகுமாரும் அவரது மகள் ஜோவிகாவும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதாக கூறினார்.
ராபர்ட் தனது தாயார் மட்டுமல்ல, அவரது தந்தையார் பற்றியும் சில இனிமையான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். மாஸ்டர் ராபர்ட் தனது தாயார் குறித்த பல உணர்ச்சிகரமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். மாஸ்டர் ராபர்ட் தனது தாயாருக்கு 75 வயது என்றும், அவர் அவருக்குப் பெரும் ஆதரவாக இருந்தார் என்றும் மனம் வருந்தி பேசினார். ராபர்ட் மாஸ்டரின் நடனத் திறனுக்கு அவரது தாயாரே முதல் வழிகாட்டியாக இருந்துள்ளார்.
இளம் வயதிலேயே ராபர்ட்டிற்கு நடனத்தின் நுணுக்கங்களை கற்றுக் கொடுத்து, அவரை நடன உலகின் நட்சத்திரமாக மாற்றியதில் அவரது பங்கு முக்கியமானதுஎன்றார். அவரது தாயார் ராபர்ட்டின் திறமையை அடையாளம் கண்டு, அவரை முறையாக நடனப் பயிற்சிக்கு அனுப்பியதாகவும்கூறினார். ராபர்ட் மாஸ்டரின் தாயார் ஒரு சிறந்த நடனப் பயிற்சியாளராகவும் இருந்தார். பல மாணவர்களுக்கு நடனம் கற்றுக்கொடுத்த அனுபவமும் அவருக்கு உண்டுஎன்றார். அவரது இறப்புக்குப் பிறகு, மாஸ்டர் ராபர்ட் அவரது நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட போது, “என் தாயார் நடனத்தின் மூலமாகவே வாழ்ந்தவர்” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.