/indian-express-tamil/media/media_files/2025/09/11/indiraja-2025-09-11-13-04-45.jpg)
அதுவாக சுற்றும் தேங்காய்... வறுத்தெடுத்துக்கும் நெட்டிசன்கள்; அடுத்த சர்ச்சையில் சிக்கிய ரோபோ சங்கர் மகள்!
தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான காமெடி ஷோக்கள் மூலம் பிரபலமான ரோபோ சங்கர், தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாரி’, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ’புலி’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ரோபோ சங்கர் உடல் எடை குறைந்து நோய்வாய் பட்டது போல் காணப்பட்டார். அதற்கு குடி பழக்கம் தான் காரணம் என பலரும் விமர்சித்து வந்தனர். பின்னர் முறையான சிகிச்சை மூலம் தற்போது உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.
ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘விருமன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் தனது உறவினரான கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் தனியார் யூடியூப் சேனலில் ஒளிப்பரப்பானது. அளவுக்கதிகமான ஒளிப்பரப்பு காரணமாக அந்த வீடியோக்கள் சர்ச்சையில் சிக்கியது.
இந்த பிரச்சனை கொஞ்சம் ஓய்ந்த நிலையில் இந்திரஜா - கார்த்திக் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை தொடர்பான வீடியோக்களையும் அவர்கள் தங்களது யூடியூப் சேனலில் பதிவிட்டு வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு பல சிக்கல்களை சந்தித்து வரும் இந்திரஜா தற்போது புதிய சிக்கல் ஒன்றில் மாட்டியுள்ளார்.
அதாவது, சித்தரின் அருள் வாக்கால் தேங்காயும் குழவிக்கல்லும் தானாக சுற்றும் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ திருப்பூர் வஞ்சிபாளையம் அரசு பள்ளி அருகில் உள்ள ஶ்ரீ சுயம்பு வாலை வாராஹி தெய்வீக சித்தர் பீடம், இந்த கோவிலில் வாராஹி அம்மன் சுயம்புவாக உருவாகியுள்ளது. நாம் அருள் வாக்கு கேட்க கேட்க, தேய்காயும், குழவிக்கல்லும் தானாக சுத்துகிறது இதைப்பார்த்து எனக்கு மெய் சிலிர்த்துவிட்டது.
இந்த சித்தர் அருள்வாக்கு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த கோவிலுக்கு எங்களால் முடிந்ததை நாங்கள் செய்தோம். உங்களால் முடிந்த உதவிகளை கியூஆர் கோடை ஸ்கேன் செய்து செய்யுங்கள்” என்று பதிவிட்டிருந்தார். இதனை பார்த்து கொதித்தெழுந்த நெட்டிசன்கள் காசுக்கான என்ன வேணும்னாலும் செய்வீங்களா என சரமாரியாக கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
அண்மையில், இந்திரஜா தனது ஆறு மாத குழந்தைக்கு தனியார் நிறுவனம் ஒன்று அறிவு வளர்ச்சியை தூண்டும் பயிற்சி கொடுக்கும் வீடியோவை பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஆறு மாத குழந்தைக்கு இப்பவே பயிற்சியா? குழந்தையை வைத்தும் சம்பாதிக்க வேண்டுமா? என கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தகக்து.
இந்த ரோபோ சங்கர் பொண்ணுக்கு scam விளம்பரம் செய்வதே வேலையாக இருக்கு. தேங்காய் அதுவாக சுற்றி வருதாம் அருள்வாக்கு சொல்லும்போது. இதுவும் கோவை தான்.. ஏன் யா எவ்ளோ தான் தாங்கும் pic.twitter.com/cXfClgtU4E
— Nordnomad (@arcot2arctic) September 11, 2025
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us