நடிகர் அஜித் நடிக்கும் விஸ்வாசம் திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரோபா சங்கர், அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.
சினிமா ஸ்டிரைக்கு ஏப்ரல் 17 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன் பின்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சினிமா படப்பிடிப்புக்கள் தொடங்கின. திரையரங்குகளிலும் புதிய படங்கள் வெளிவந்தன. இந்நிலையிஉல், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பாரப்பை ஏற்படுத்தி இருக்கும் அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங்கும் கடந்த 7 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது.
படம்பிடிப்பு தொடங்கி இரண்டு நாட்கள் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில், தல அஜித்துடன் ரோபோ சங்கர் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குனர் சிவா 4வது முறையாக அஜித்தை வைத்து இயக்கும் திரைப்படம் விஸ்வாசம். பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் இமான் முதன்முறையாக அஜித் படத்திற்கு இசையமைக்கிறார். படம் எந்தமாதிரியான கதையம்சம் கொண்டது என பல புரளிகள் வந்தாலும் படக்குழு எதனையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
இன்று காலை வெளியான இந்த புகைப்படம் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் எல்லோரின் கவனத்தையும் பெற்றுள்ளது. குறிப்பாக அஜித் இந்த புகைப்படத்தில் வழக்கமான சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் கேஷூலாக இருக்கிறார். அஜித்துடன் புதிய கூட்டணியாக ரோபோ சங்கர் இணைந்திருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
,
இந்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருவது குறிப்பிடதக்கது. இன்றைய தினம் போன்ற ஹாஸ்டேக்குகளும் ட்விட்டர் வலைப்பக்கத்தில் ட்ரெண்ட் அடித்துள்ளது.