/tamil-ie/media/media_files/uploads/2020/06/New-Project-2020-06-23T202802.667.jpg)
indraja pandiyamma lungi dance, robo shankar daughter indraja pandiyamma, indraja sankar, பாண்டியம்மா டான்ஸ், வைரல் வீடியோ, ரோபோ ஷங்கர், விஜய், pandiyamma dance video viral, viral video, tamil video news, viral video news, tamil cinema, vijay birthday wishes
விஜய் பிறந்தநாளுக்கு நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கரும் அவருடைய மகள் இந்திரஜா பாண்டியம்மா லுங்கி கட்டிக்கொண்டு ஒரு மாஸான டான்ஸ் வீடியோவை வெளியிட்டு மாஸ் டான்ஸ் வாழ்த்து தெரிவிதுள்ளனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஜயின் பிறந்த நாள் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்பட்டது. அவருடைய பிறந்த நாளை தற்போது கொரோனா ஊரடங்கு காலமாக இருப்பதால் டுவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்களில் புகைப்படங்களை வெளியிட்டும் வீடியோக்களை வெளியிட்டும் வாழ்த்து தெரிவித்து கொண்டாடினர்.
அந்த வரிசையில், விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி சினிமாவில் நுழைந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவரும் ரோபோ ஷங்கரும் அவருடைய மகள் இந்திரஜாவும் ஒரு மாஸான டான்ஸ் ஆடி விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா பாண்டியம்மா, அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பிகில் படத்தில் அவருடைய நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டு வரவேற்கப்பட்டது. அதிலிருந்து அவருடைய இந்திரஜா என்ற பெயருடன் பலரும் பாண்டியம்மாவை இணைத்து இந்திரஜா பாண்டியம்மா என்று அழைக்கும் அளவுக்கு பிரபலமானார்.
இந்த நிலையில்தான், விஜய் பட பாடலின் இசைக்கு நடிகர் ரோபோ ஷங்கரும் இந்திரஜாவும் லுங்கி கட்டிக்கொண்டு சேர்ந்து ஒரு மாஸ் லுங்கி டான்ஸ் ஆடி விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திரஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், “பிறந்தநாள் வாழ்த்துகள் தளபதி; நாங்கள் உங்களை மிகவும் நேசிக்கிறோம் சார். நீங்கள் என் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியா நினைவுகள் உங்களுடைய து இருக்கு சார்; நீங்கள் என்னை ஒரு அப்பாவைப் போல, நண்பரைப் போல, நலம் விரும்பியைப் போல பார்த்துக்கொண்டீர்கள். உங்களை அதிகம் நேசிக்கிறோம் சார்” என்று பதிவிட்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.