Advertisment

மாமியாருக்கு லிப் கிஸ்... மருமகன் செய்யும் வேலையா இது? இந்திரஜா திருமண வரவேற்பில் சர்ச்சை

ரோபோ சங்கர் மகள் திருமணம் கடந்த மாதம் 24-ந் தேதி மதுரையில் நடைபெற்றது. இதில் அறந்தாகி நிஷா, மற்றும் நடிகர் சூரி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

author-image
WebDesk
New Update
Lip Kis Robo Shankar Daughter

ரோபோ சங்கர் மகள் வரவேற்பு நிகழ்ச்சி

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவரது மருமகன் ரோபோ சங்கரின் மனைவிக்கு உதட்டில் முத்தம் கொடுத்த்தாக வெளியாகியுள்ள புகைப்படம் இணையத்தில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

Advertisment

மெமிக்ரி கலைஞராக இருந்து தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ரோபோ சங்கர். டிவி. நிகழ்ச்சிகளில், சிவாஜி கணேசன், விஜயகாந்த் போன்ற நடிகர்கள் மாதிரி மெமிக்ரி செய்து அசத்திய இவர், 1997-ல் விஜயகாந்த் நடிப்பில் வெளியான தர்மச்சக்கரம் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர், பல படங்களில் வில்லன்களுக்கு அடியாளாக நடித்துள்ளார்.

தொடர்ந்து ஆறாது சினம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சிங்கம் 3, விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பிரியங்கா என்ற பெண்ணை மணந்துகொண்ட ரோபோ சங்கருக்கு இந்திரஜா என்ற ஒரு மகள் இருக்கிறார். விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்திருந்த இந்திரஜா, அடுத்து விருமன் படத்தில் நாயகியின் தோழியாக சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ரோபோ சங்கர், தற்போது உடல்நலம் தேறியுள்ள நிலையில், தனது மகளின் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று யோசித்து அவருக்கு மாப்பிள்ளை பார்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதில் ரோபோ சங்கரின் மனைவி உறவுமுறையில் தம்பியான கார்த்திக் என்பவரை மாப்பிள்ளையாக தேர்வு செய்து திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

இவர்களின் திருமணம் கடந்த மாதம் 24-ந் தேதி மதுரையில் நடைபெற்றது. இதில் அறந்தாகி நிஷா, மற்றும் நடிகர் சூரி ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதன் பிறகு சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பங்கேற்ற நிலையில், வரவேற்பு நிகழ்ச்சியில் ரோபோ சங்கரின் மருமகன் கார்த்திக் செய்த செயல் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

வரவேற்பு நிகழ்ச்சியில் ரோபோ சங்கரின் மனைவியும், கார்த்திக்கும் மேடையில் ஆடிக்கொண்டிருந்தபோது, கார்த்திக் ரோபோ சங்கர் மனைவி பிரியங்காவிற்கு உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் திருமண வரவேற்பில் மாமியாருக்கு உதட்டில் முத்தம் கொடுப்பார்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல் இந்திரஜா தனது அப்பா ரோபோ சங்கருக்கு உதட்டில் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படமும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Robo Shankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment