விஜய் டிவி-யில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ரோபோ சங்கர். முதலில் மேடை நகைச்சுவை நிகழ்ச்சிகளின் மூலம் தன் வாழ்க்கையை தொடங்கிய இவர், பிறகு சின்னத்திரை, வெள்ளித்திரை என படிப்படியாக முன்னேறினார். குறிப்பாக, இவர் நடித்த தனுஷின் 'மாரி', விஷ்ணு விஷாலின் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அவரை முன்னணி காமெடி நடிகராகவும் அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றது.
திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துவரும் ரோபோ சங்கர், டிவி நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது பங்கேற்று வருகிறார். இதற்கிடையில், அவர் உடல் எடை மெலிந்து காணப்படும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது நிலைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. குறிப்பாக அவருக்கு மஞ்சள் காமாலை பிரச்னை இருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
இதுகுறித்து பேசிய ரோபோ சங்கர், 'மீடியாவில் என்னைப் பற்றி வெளியான தகவல்கள் தவறானவை. உடல் எடையை குறைக்க டயட்டில் இருந்தேன். அந்த நேரத்தில் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இரண்டும் சேர்ந்து எனது உடலை உருக்கிவிட்டது. தற்போது அதிலிருந்து மீண்டுவந்துவிட்டேன். உடல் நலம் சரியில்லாத போது என் குடும்பத்தினர் நன்றாக பார்த்துக்கொண்டனர்" என்று தெரிவித்தார்.
ஹன்சிகாவை விளாசிய ரோபோ சங்கர்
நடிகர் ஆதி, ஹன்சிகா, யோகி பாபு, ரோபோ சங்கர் நடிப்பில் தயாரியுள்ள 'பார்ட்னர்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய ரோபோ சங்கர் படப்பிடிப்பு தளத்தில் நடிகை ஹன்சிகா நடந்து கொண்ட விதத்தை வெளிப்படுத்தினார். விழா மேடையில் முதலில் வந்து பேசிய ரோபோ சங்கர் நடிகை ஹன்சிகாவை மேடையிலேயே வர்ணித்தார்.
"ஹன்சிகா மொதலவாணி மெழுகு சிலை பொம்மை தான். இந்த மைதா மாவ பிணஞ்சு அத செவுத்துல அடிச்சு விட்ட மாறி, அவ்ளோ அழகு." என்று வர்ணித்த ரோபோ சங்கர், நேராக தனது மனதில் இருந்த அந்த நெருடலான விஷயத்தை மேடையிலேயே போட்டு உடைத்தார்.
"படத்துல ஒரு காட்சியில், அதுல நான் அவங்க கால தொடணும் (தடவனும்). அதாவது ஒரு பொருள தேடி முட்டிக்கு கீழே கால தொடணும். அந்த காட்சி எடுக்க நான் போராடினேன். ஆனா அவங்க முடியவே முடியாதுன்னு சொன்னாங்க. ஹன்சிகா காலில் விழுந்துல்லாம் நானும் இயக்குநரும் கெஞ்சுனாம்.
கால் கட்ட விரலையாவது தொட்டுக்கிறேனே கேட்டேன். அவங்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. ஒன்லி ஹீரோ ஆதி மட்டும் தான் டச்சிங் மீ. மத்தபடி யாரும் நோ டச்சிங் சொல்லிட்டாங்க. அப்பதான் புரிந்தது ஹீரோ ஹீரோதான்.. காமெடியன் ஓரமாதத் தான் நிக்கணும். இப்படித்தான் மேடையில அப்பப்ப இங்கிலீஷ்ல பேசிருவேன். ஜஸ்ட் ஃபார் ஃபன்" என்று சிரித்தவாறே மேடையில் இருந்த அனைவரும் நன்றி கூறி முடித்துக்கொண்டார் ரோபோ சங்கர்.
ரோபோ சங்கர் இவ்வாறு பேசியதற்கு மேடைக்கு கீழ் இருந்தவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அவரது ரசிகர்கள், ஹன்சிகா நடிப்புக்கு கூட அவரை தொட விடவில்லை ஏன் என்று வறுத்தெடுத்து வருகிறார்கள். இதனால், சினிமா வட்டாரத்தில் ரோபோ சங்கரை மையமாக வைத்து அடுத்த பெரிய சர்ச்சையும் வெடித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.