தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வரும் ரோபோ சங்கர், தற்போது 'அம்பி' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகியுள்ளார்.
சின்னத்திரையில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகள் மூலம் மக்களால் நன்கு அறியப்பட்டவர் ரோபோ சங்கர். இவர் மிமிக்ரி, ஸ்டாண்ட் அப் காமெடி என பல திறமைகளால் தனக்கென ரசிகர் பட்டாளம் உருவாக்கியுள்ளார்.
'வாயை மூடி பேசவும்' திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்த இவர், மாரி, இரும்பு திரை, மிஸ்டர். லோக்கல் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சந்தானம், சூரி ஆகியோர் போன்று தற்போது ரோபோ சங்கரும் கதாநாயகனாக நடிக்கிறார்.
டி2 மீடியா நிறுவனம் தயாரிக்கும் 'அம்பி' என்ற படத்தில் ரோபோ சங்கர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை பாஸர் ஜே.எல்வின் இயக்குகிறார். அஸ்வினி சந்திரசேகர் ரோபோ சங்கருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், கஞ்சா கருப்பு, ரமேஷ் கண்ணா, இமான் அண்ணாச்சி, மீசை ரஜேந்திரன், கோவை பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“