/indian-express-tamil/media/media_files/2025/09/12/roja-2025-09-12-12-12-45.jpg)
நடிகை ரோஜா மகளுக்கு அதற்குள் அவார்டு: செம்ம பிரைட் அன்சு மாலிகா
கடந்த 1992-ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘செம்பருத்தி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரோஜா. தொடர்ந்து, உழைப்பாளி, அதிரடிப்படை, சூரியன், சுயம்வரம், திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, கந்தா கடம்பா கதிர்வேலா, பொட்டு அம்மன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ரஜினி முதல் விஜய் வரை அனைத்து நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கிலும் அனைத்து கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த நடிகை ரோஜா அங்கு தனக்கான இடத்தைப் பிடித்து அரசியலில் நுழைந்தார். அரசுயலில் தீவிர கவனம் செலுத்துவதற்காக திரைத்துறையில் இருந்து விலகுவதாக நடிகை ரோஜா அறிவித்தார்.
ஜெகன் மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ரோஜா, அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு, அரசியல் குறித்த அட்வைஸ் கூறினார். திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி - ரோஜா தம்பதியினருக்கு அன்சு மாலிகா என்ற மகள் உள்ளார்.
இவர் அமெரிக்காவில் உள்ள இண்டியானா பல்கலைக்கழகத்தில் அறிவாற்றல் அறிவியல் படிப்பில் இளங்கலை பட்டப்படிப்பை படித்து வருகிறார். இந்த நிலையில் பெண்கள் மற்றும் தொழில்நுட்பத்துக்கான சிறப்பு மையம், 2025-ம் கல்வியாண்டுக்கான “மவுரீன் பிக்கர்ஸ்” என்ற தலைமைத்துவ விருதை அவருக்கு அறிவித்து இருக்கிறது.
இந்த விருது கல்வி மற்றும் தொழில் முறை சிறப்பின் சேவையில் தொழில்நுட்ப திறன்களை பயன்படுத்துவதில் நீண்டகால அர்ப்பணிப்பை வெளிப்படுத்துபவர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் மாணவி அன்சு மாலிகாவுக்கு இந்த விருது தற்போது வழங்கப்பட்டிருக்கிறது. உலகில் பின்தங்கிய சமூகங்களை சேர்ந்தவர்கள் அணுகக்கூடிய தொழில்நுட்ப கல்வி வாய்ப்புகளை உருவாக்குவதில் மாணவி அன்சு மாலிகாவின் பணி மிக முக்கியமானதாக அமைந்திருந்தது.
மேலும் அவருடைய தலைமை, தொலைநோக்கு, உலகளாவிய தாக்கம், தொழில்நுட்ப சமத்துவம் வாழ்க்கையை மாற்றும் மற்றும் அனைவருக்கும் கல்வி, தொழில்முறை வாய்ப்புகளுக்கான கதவுகளை திறக்கும் என்ற நம்பிக்கையும் இந்த விருதை அவர் பெற காரணமாக அமைந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us