Advertisment

ரோஜா சீரியல் அர்ஜுன் ஷாக் அறிவிப்பு: இனி எந்த சீரியலும் நடிக்க மாட்டாராம்!

Sun tv actor sibbu won't act serials anymore: என்னுடைய மேனரிசங்களைப் பார்த்து தான் எனக்கான கதாப்பாத்திரங்களை கதையாசிரியர்கள் எழுதுகிறார்களோ என்று சில நேரங்களில் நான் நினைப்பதுண்டு என சொல்லும் சிபு திரைப்படங்களில் நடிக்க உள்ளதால் ரோஜாவே தனது கடைசி சீரியல் என்று கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
ரோஜா சீரியல் அர்ஜுன் ஷாக் அறிவிப்பு: இனி எந்த சீரியலும் நடிக்க மாட்டாராம்!

சன் டிவி-யில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘ரோஜா’. இந்த சீரியலில் அர்ஜூனாக நடித்து வரும் சிபு சூரியன் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அது ரோஜாவே எனது கடைசி சீரியல் என்பதாகும். தொலைக்காட்சி நடிகர் சிபு சூர்யன், தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக் கூடியவர். தான் நடித்து வரும் ரோஜா சீரியல் தான், தனது கடைசி சீரியலாக இருக்கும் என ஆங்கில ஊடகமான டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்திருக்கும் பேட்டியில் சிபு சூரியன் தெரிவித்துள்ளார்.

Advertisment

என்னுடைய மேனரிசங்களைப் பார்த்து தான் எனக்கான கதாப்பாத்திரங்களை கதையாசிரியர்கள் எழுதுகிறார்களோ என்று சில நேரங்களில் நான் நினைப்பதுண்டு என சொல்லும் சிபு திரைப்படங்களில் நடிக்க உள்ளதால் ரோஜாவே தனது கடைசி சீரியல் என்று கூறியுள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த சிபு, ஆரம்பத்தில் தனக்கு அறிமுகமில்லாத ஒரு தொழிலில் இவ்வளவு நேசிக்கப்படுவது அதிர்ஷ்டம். நான் ஒருபோதும் நடிக்க முடியும் என்று நினைத்ததில்லை. எனது நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் நிறைய பேர் எப்போதும் என்னிடம் உனக்கு திரைக்கான முக அமைப்பு இருப்பதாக சொன்னார்கள், ஆனால் நான் அதை ஒருபோதும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் காலப்போக்கில், நான் மாடலிங் துறையில் இறங்கினேன். இதன் மூலம், கன்னட சீரியலில் பணியாற்ற எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, இது இந்த துறையில் கால் பதிக்க எனக்கு உதவியது, என்று கூறுகிறார்.

கன்னட சீரியல்களில் நடித்துகொண்டிருந்த போது எனக்கு தமிழ் சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. தமிழ் தெரியாவிட்டாலும், தமிழ் சீரியல்களில் நடிக்க விருப்பம் இருந்ததால் ரோஜா வாய்ப்பை ஏற்றுக் கொண்டேன் என்று கூறினார்.

மேலும், அர்ஜுன் ஒரு அக்கறையுள்ள பையன், ஆனால் ஒரு அணுகுமுறை கொண்டவர். மக்கள் சொல்வதைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை. நான் அவரைப் போலவே இருப்பதால் அர்ஜுனுடன் என்னால் தொடர்பு கொள்ள முடிந்தது. நான் கச்சிதமாக இருக்க முயற்சிக்கிறேன், அது முடியாதபோது, ​​என் தவறுகளை நானே சரிசெய்கிறேன். நான் யாரைப் பற்றியும் பின்னால் பேசமாட்டேன், எனது கருத்துக்களில் நான் வெளிப்படையாக இருக்கிறேன் என்று சீரியலில் தன் கதாபாத்திரத்தை நிஜ வாழ்வோடு ஒப்பிட்டு பேசினார்.

பின்பு, முதல் சில வாரங்களில், எனக்கு மொழி தெரியாததால் கஷ்டப்பட்டேன். நான் ஒரு கன்னடத்தைச் சேர்ந்தவன் என்பதால் பார்வையாளர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா என்று யோசித்தேன். 50 எபிசோடுகளுக்கு  பிறகு நான் வந்ததால் அழுத்தம் அதிகமாக இருந்தது. நான் இந்த பாத்திரத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, அர்ஜுனின் கதாபாத்திரத்தில் வேறொருவர் இருந்தார்.. ஆனால் நானாக இருக்க முடிவு செய்தேன். இப்போது, ​​மக்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள்

கடந்த மூன்றரை ஆண்டுகளாக நான் இதில் நடித்து வருகின்றேன். இப்போது OTT மற்றும் படங்கள் போன்ற மற்ற தளங்களில் வெவ்வேறு வேடங்களில், கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளேன். நான் சீரியல்களில் நடிக்கத் தொடங்கிய போது, நான் ஒரு சராசரி நடிகராக இருந்தேன். இப்போது, நிறைய மேம்பட்டுள்ளேன். தொலைக்காட்சி சீரியல்களில் பணிபுரியும் போது நான் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். நிச்சயமாக, படங்கள் ஆபத்தானவை, சவால்கள் நிறைந்தவை என எனக்குத் தெரியும். ஆனால் அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்” என்றார்.

மேலும் தொடர்ந்த சிபு, “இசையமைப்பாளர்-இயக்குனர் ஹம்சலேகா இயக்கும் சகுந்தலா என்ற கன்னட படத்தில் இப்போது நடித்து வருகிறேன். இதில் ஒரு எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். மேலும் ஒரு நல்ல குழுவினருடன் தமிழிலும் ஒரு படத்தில் நடிக்கிறேன். இப்போது அது தொடர்பான எந்த விவரங்களையும் வெளியிட எனக்கு அனுமதி இல்லை. ஆனால் படத்தில் நான் ஒரு அரசியல்வாதியாக நடிக்கிறேன் என்பதை மட்டும் சொல்ல முடியும்” என்ற குறிப்பையும் கொடுத்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actor Sibbu Suryan Roja Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment