Advertisment

ரோஜா அர்ஜுனுக்கு இவ்ளோ நல்ல மனசா? மாலத்தீவில் இருந்து திரும்பியதும் கியூட் கொண்டாட்டம்

ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சின்னத்திரை நடிகர்

author-image
WebDesk
Apr 07, 2021 12:48 IST
ரோஜா அர்ஜுனுக்கு இவ்ளோ நல்ல மனசா? மாலத்தீவில் இருந்து திரும்பியதும் கியூட் கொண்டாட்டம்

ரோஜா சீரியல் நடிகர் சிபு சூர்யன் தனது பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் கொண்டாடி உள்ளார்.

Advertisment

சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘ரோஜா’ சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ஹீரோவாக சிபு சூரியன், ஹீரோயினாக பிரியங்கா நல்காரி நடித்து வரும் இந்த சீரியலில் அவர்களின் ரொமான்ஸ் காட்சிகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தொலைக்காட்சி தொடர்களில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் இந்த சீரியல் தற்போது 800 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இந்த தொடரில் சிபு சூர்யன் அர்ஜூன் என்ற கேரக்டரில் வழக்கறிஞராக நடிக்கிறார்.

ரோஜா சீரியல் புகழ் நடிகர் சிபு சூர்யன் சமீபத்தில் தனது பிறந்தநாளை மாலத்தீவில் கொண்டாடினார். அங்கு கேண்டில் லைட் டின்னரில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் லைவ் வீடியோவில் ரசிகர்களிடம் பேசிய சிபு தான் விரைவில் திருமண அறிவிப்பை வெளியிடப்போவதாகவும் தெரிவித்திருந்தார். மாலத்தீவில் ரசிகர்கள் பலரும் அவரை அடையாளம் கண்டுகொண்டு கேட்டதாக கூறினார்.

மாலத்தீவில் பிறந்தநாள் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு தற்போது சென்னை திரும்பியுள்ள சிபு, இங்குள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று அங்குள்ளவர்களுடன் சேர்ந்து தனது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் இவரது செயலுக்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்தி வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Actor Sibbu Suryan #Roja Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment