பொங்கல் கொண்டாட விமானத்தில் பறந்த பிரியங்கா: குடும்பத்தினருடன் என்ஜாய்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் நடிக்கும் பிரியங்கா பொங்கல் விடுமுறையை குடும்பத்தினருடன் ஜாலியாக கொண்டாட விமானத்தில் பறந்துள்ளார்.

Sun TV Roja Serial, Roja Serial Actress Priyanka Nalkari, Priyanka Nalkari flying with family to celebrates Pongal leave, பொங்கல் கொண்டாட விமானத்தில் பறந்த பிரியங்கா நல்காரி, ரோஜா பிரியங்கா, ரோஜா சீரியல் பிரியங்கா குடும்பத்தினருடன் என்ஜாய், Priyanka Nalkari, Roja, Tamil news

சன் டிவியில் ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் நடிகை பிரியங்கா நல்காரி ரோஜா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரோஜா சீரியலுக்கு இல்லத்தரசிகள், இளம் பெண்கள், ஆண்கள் என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

சன் டிவியில் ஆயிரம் எபிசோடுகளைத் தாண்டி ஒளிபரப்பாகிவரும் ரோஜா சீரியலில், ஹீரோயினாக நடிக்கும் சிபுசூரியனுக்கும் பிரியாங்காவுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி என்பது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று.

நடிகை பிரியங்கா நல்காரி ரோஜா சீரியலில் பிசியாக இருந்தாலும் ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் குடும்பத்தினருடன்க்கொண்டாடி வந்துள்ளார். அந்த வகையில், பிரியங்கா தற்போது பொங்கல் விடுமுறையை குடும்பத்தினருடன் கொண்டாட ஜாலி டூருக்காக விமானத்தில் பறந்துள்ளார்.

பிரியங்கா தனது குடும்பத்தினருடன் விமான நிலையத்தில் இருக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் பிரியங்கா, “நான் இப்போ லீவில் இருக்கிறேன். குடும்பத்துடன் ஜாலியாக லீவை கொண்டாடுகிறேன். இந்த அமைதி பிரேக் எனக்கு தேவைப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பிரியங்கா நல்காரி பனிப் பிரதேசத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம், பிரியங்கா இந்த பொங்கல் விடுமுறையை தனது குடும்பத்தினருடன் பனி பிரதேசத்தில் கொண்டாடி வருகிறார் என்பது தெரிகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Roja serial actress priyanka nalkari flying with family to celebrates pongal leave

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com