இந்த டாட்டூவில் என்ன ஸ்பெஷல்? ரோஜா நாயகியை நச்சரிக்கும் ரசிகர்கள்

சீரியல் நடிகையின் டாட்டூ போட்டோ வைரல்

priyanka nalkari

சின்னத்திரையின் முன்னணி நடிகை தனது உடலில் டாட்டூ குத்தி வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரைப்பட நடிகைகள், சின்னத்திரை நடிகைகள் பலரும் டாட்டூ குத்துவதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அன்றைய கால நடிகைகள் முதல் தற்போது உள்ள நடிகைகள் வரை டாட்டூ குத்தும் கலாச்சாரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தங்களது ரசிர்களை கவர பல நடிகைகளும் உடலில் சில இடங்களில் டாட்டூ குத்தி அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர்.

அந்த லிஸ்ட்டில் தற்போது லேட்டஸ்ட்டாக இணைந்திருப்பவர் சின்னத்திரை நடிகை பிரியங்கா.. சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘ரோஜா’ சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ஹீரோவாக சிபு சூரியன், ஹீரோயினாக பிரியங்கா நல்காரி நடித்து வரும் இந்த சீரியலில் அவர்களின் ரொமான்ஸ் காட்சிகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

தொலைக்காட்சி தொடர்களில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் இந்த சீரியலில் நடித்து வரும் பிரியங்கா தனது சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருப்பார். அவ்வபோது டப்மேஷ் வீடியோக்கள், புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது பிரியங்கா தனது உடலில் கழுத்துக்கு சற்று கீழே டாட்டூ குத்தியுள்ள ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த டாட்டூவில் அப்படி என்ன ஸ்பெஷல்? என கமெண்ட்ஸில் கேள்வி கேட்டு பிரியங்காவை நச்சரித்து வருகின்றனர். சில ரசிகர்கள் டாட்டூ கியூட் டாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். பிரியங்காவின் டாட்டூ புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Roja serial actress priyanka tatoo viral on social media

Next Story
விருதுகளை அள்ளிய குக் வித் கோமாளி: யார் யாருக்கு அவார்டுனு பாருங்க!vijay tv awards, vijay tv award, cooku with comali team maximum award winning, விஜய் டிவி விருதுகள், குக்கு வித் கோமாளி, புகழ், ஷிவாங்கி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2, pugazh, shivangi, raja rani 2, alya manasa, bharathi kannamma, cooku with comali
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com