அவசர உதவி : ‘ரோஜா’ வில்லி ஷாமிலியின் நாய்க்குட்டிக்கு என்னதான் ஆச்சு?

Roja serial Anu Shamili Sukumar Youtube Channel latest video அப்படி என்னதான் இந்த வீடியோவில் ஸ்பெஷல் என்றால், அது நாய்க்குட்டிக்கு கொடுக்கப்பட்ட மைண்ட் வாய்ஸ் ஓவர்தான்.

Roja serial Anu Shamili Sukumar Youtube Channel latest video
Roja serial Anu Shamili Sukumar Youtube Channel latest video

Roja serial Anu Shamili Sukumar Youtube Channel latest video : டிஆர்பி-ல் நீண்ட காலமாக நம்பர் ஒன் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் சீரியல் ரோஜா. இதில் வலுவான வில்லியாக ‘அனு’ கதாபாத்திரத்தில் நடித்தவர் ஷாமிலி சுகுமார். சமீபத்தில் கர்ப்பம் தரித்த பிறகு, சீரியலில் நடிப்பதிலிருந்து ஓய்வு பெற்றிருக்கும் ஷாமிலி, தன்னுடைய யூடியூப் சேனல் வழியாக தன் ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

இரண்டு லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்ஸ் கொண்டிருக்கும் இவருடைய சேனலில், ஏராளமான Vlog காணொளிகள்தான் அதிகம். அந்த வரிசையில், சமீபத்தில் தன்னுடைய செல்ல பிராணிக்கு எமெர்ஜென்சி என்று பதிவிட்ட காணொளி, பெரும்பாலான லைக்ஸ்களை குவித்துக்கொண்டிருக்கின்றது. அப்படி என்னதான் இந்த வீடியோவில் ஸ்பெஷல் என்றால், அது நாய்க்குட்டிக்கு கொடுக்கப்பட்ட மைண்ட் வாய்ஸ் ஓவர்தான்.

ராக்ஷி என்னும் அந்த நாய்க்குட்டி படுசுட்டி. அதற்கு காதில் ஏதோ நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதனால் உடனே கால்நடை மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார் ஷாமிலி. காரில் செல்ல செல்ல ராக்ஷி செய்த சேட்டைகள் கொஞ்சமா! அதன் ஒவ்வொரு அசைவுக்கும் எடிட்டிங்கில் இணைக்கப்பட்டிருக்கும் வசனங்கள் அனைத்தும் கட்சிதமாகப் பொருந்தின.

நம்மைப்போலவே, ராக்ஷிக்கும் மருத்துவமனை என்றால் மிகவும் பயமாம். அதுவரை காரில் உல்லாசமாகப் பயணம் செய்து வந்த ராக்ஷி, மருத்துவமனையைப் பார்த்ததும் முன்வைத்த காலை பின் வைக்கமுடியாமல் தவித்தது. அவ்வளவு அடம். அங்கிருக்கும் நர்ஸ் வந்ததும் போதும், ராக்ஷியின் கை காலெல்லாம் நடுக்கம். சூப் மட்டும்தான் சாப்பிடும் ராக்ஷிக்கு நிறையப் போஷாக்கு நிறைந்த மருந்துகளை எழுதி கொடுத்தார் நர்ஸ்.

பிறகு அதற்கு ஏராளமான ஸ்நாக்ஸ் வேறு. இப்படி குழந்தையைப் பார்த்துக்கொள்வது போல தன் நாய்க்குட்டியுடன் அன்பாக நடந்துகொண்டார். பிறகு என்ன! வீடு திரும்பிவிட்டனர் அனைவரும். ஏராளமான Vlog காணொளிகள் இவருடைய யூடியூப் சேனலில் இருந்தாலும், இந்த காணொளி சற்று வித்தியாசமாகவும், நாயின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும்படியாக அமைந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Roja serial anu shamili sukumar youtube channel latest video

Next Story
சிவப்புத் தோலும் பாலியல் தேர்வும்… கறுப்பு என்பது வெறுப்பா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com