என்னங்கடா நடக்குது இங்க... அர்ஜுன்- ரோஜா இனி இன்னொரு சீரியலிலும் வருவாங்களாம்!
Sun TV roja serial arjun, roja, kalpana play guest role in anbe vaa serial: அன்பே வா சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ரோஜா சீரியல் நட்சத்திரங்கள் அர்ஜூன், ரோஜா, கல்பனா
ரோஜா சீரியலில் வரும் அர்ஜூன், ரோஜா மற்றும் கல்பனா சன் டிவியில் வேறு ஒரு சீரியலிலும் நடிக்கவுள்ளனர்.
Advertisment
சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ரோஜா. இந்த சீரியல் டிஆர்பியில் எப்பொழுதுமே டாப்பில் தான் உள்ளது. சன் டிவி சீரியல்களிலே இந்த ரோஜா சீரியலுக்கு தமிழ் குடும்பங்களில் பெரிய வரவேற்பு உள்ளது.
சன் டிவி நிறுவனம் இந்த சீரியல் மீது தனிக் கவனம் செலுத்தி ஊரடங்கு நேரத்திலும் சீரியலை நிறுத்தாமல் ஒளிப்பரப்பி வந்தது. அந்த அளவிற்கு இந்த ரோஜா சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
அதிரடி திருப்பங்கள் நிறைந்த இந்த சீரியலின் திரைக்கதை, ரசிகர்களை தொடர்ந்து பார்க்கவைக்கிறது. இந்த சீரியலில் ரோஜாவாக பிரியங்காவும் அர்ஜூனாக சிபு சூர்யனும், அன்னபூரணியாக வடிவுக்கரசியும் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரோஜா சீரியலின் கதாப்பாத்திரங்களான, அர்ஜூன், ரோஜா மற்றும் கல்பனா சன் டிவியின் இன்னொரு சீரியலான அன்பே வா சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளனர்.
இதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது. அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஆயிஷா விஷ்ணு.