ரோஜா சீரியல் நாயகன் சிப்பு சூர்யன் திடீரென திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சன் டிவியில் ஒளிப்பரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் ரோஜா. டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த சீரியல் முன்னிலையில் இருந்து வருகிறது. சன் டிவி சீரியல்களில் ரசிகர்களால் பெரிதும் விரும்பக்கூடிய சீரியல் இது. இந்த சீரியலில் முன்னனி கதாப்பாத்திரங்களான அர்ஜூன் கேரக்டரில் சிப்பு சூர்யனும், ரோஜா கேரக்டரில் பிரியங்காவும் நடித்து வருகின்றனர். ரோஜா சீரியல், 900 எபிஷோடுகளை கடந்து ஒளிப்பரப்பாகி வருகிறது. சீரியலின் மிகப்பெரிய வெற்றிக்கு சன் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தது.
இந்த நிலையில், ரோஜா சீரியலின் ஹீரோவான சிப்பு சூர்யன் திடீரென திருமணம் செய்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அவரது ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். சிப்பு சூர்யன் தனது குடும்பத்தினர் புகைப்படங்களை இதுவரை சமூக வலைதளங்கில் வெளியிட்டதில்லை. அவருடைய புகைப்படங்களை மட்டுமே ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த, சிப்பு சூர்யன் தனக்கு திருமணம் ஆகிவிட்டதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். இதனையடுத்து ரசிகர்கள் அவரது மனைவி புகைப்படத்தை தேடி கண்டுபிடித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிப்பு சூர்யன், ரோஜா தான் என்னுடைய கடைசி சீரியல் என்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்திருந்தார். திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் கவனம் செலுத்த உள்ளதாக அப்போது கூறியிருந்தார். மேலும் சீரியல்களில் நடித்த அனுபவம் மற்றும் கற்றுக் கொண்ட விஷயங்கள் குறித்தும் பேசியிருந்தார். இயக்குனர் ஹம்சலேகா இயக்கும் கன்னட படத்திலும், தமிழில் ஒரு படத்திலும் நடிக்க உள்ளதாக கூறியிருந்தார்.
சாக்லெட் பாயாக வலம் வந்து கொண்டிந்த சிப்பு சூர்யனுக்கு கல்யாணம் ஆகவில்லை என நினைத்து வந்தநிலையில் கல்யாணம் முடிந்து விட்டதாக வெளியான தகவலால் அவரது ரசிகர்கள், சமூக வலைதளங்களில் அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil