சன் டி.வி ரசிகர்கள் ஷாக்… ரோஜா சீரியல் முக்கிய பிரபலம் திடீர் விலகல்!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியலான ரோஜா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் திடீரென விலகியுள்ளதால் சன் டிவி ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

roja serial, sun tv, sun tv serial, roja serial, Roja Serial Hero, roaja serial sibbu suryan, Roja Serial Sibbu, Sibbu Suryan, சன் டிவி, சிபு சூரியன் விலகல், சிப்பு சூர்யன், ரோஜா சீரியல், Roja Serial, Sibbu Suryan, Tamil cinema

பொழுதுபோக்கு டிவின் சேனல்கள் பார்வையாளர்களை ஈர்க்க சீரியல்களையே நம்பி இருக்கின்றன. சன் டிவி தொடங்கியதில் இருந்து அதனுடைய பலம் சீரியல்கள்தான். போட்டியாக பல டிவி சேனல்கள் வந்துவிட்டாலும் சன் டிவியின் ஏதாவது ஒரு சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியைத் தக்க வைத்துக்கொண்டிருக்கும். அந்த வகையில், பல மாதங்களாக சன் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது ரோஜா சீரியல்.

சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும்‘ரோஜா’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரோஜா சீரியல் ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழ் டிவி சீரியல்களில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் டாப் 5 இடத்தில் தொடர்ந்து டாப்பில் இருந்து வரும் ரோஜா சீரியலில் ஹீரோவாக நடிகர் சிபு சூர்யனும், ஹீரோயினாக பிரியங்கா நல்காரியும் நடிக்கிறார்கள். முதலில், இதில் ஷாமிலி வில்லியாக நடித்து இருந்தார். பின்னர், அவர் கர்ப்பமானதால், சீரியலை விட்டு விலகினார். இவருக்கு பதில் தற்போது அனு என்ற கதாபாத்திரத்தில் அக்சயா வில்லியாக நடித்து வருகிறார்.

இவரைத் தொடர்ந்து, இந்த சீரியலில் அஸ்வின் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வெங்கட் விலகினார். இப்படி பல முக்கிய கதாபாத்திரங்கள் ரோஜா சீரியலில் இருந்து விலகினாலும் டாப்பில் தான் இருந்து வருகிறது.

இந்தநிலையில் ரோஜா சீரியல் இருந்து ஹீரோவாக நடிக்கும் சிபு சூர்யன் திடீரென விலகி இருக்கும் தகவல் சமூக ஊடகங்களில் மீடியாவில் வைரலாகி சன் டிவி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. ரோஜா சீரியலில் இருந்து சிபு சூரியன் விலகுவதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக சிபு சூரியன் கூறியிருப்பது, நான் ரோஜா சீரியலில் இருந்து விலகுகிறேன். வரும் ஆகஸ்ட் வரை மட்டுமே நான் நடிப்பேன். அதிகம் யோசித்து, புரோடக்சன் டீம் அனுமதியுடன் நான் இன்னொரு பயணத்தை தொடங்குகிறேன்.

குட்-பை சொல்வது அவ்வளவு சுலபம் அல்ல. ஆனால், சில நேரங்களில் அது மிக அவசியமான ஒன்றாகிறது. அர்ஜுன் கதாபாத்திரம் எனக்கு எப்போதும் ஸ்பெஷல். என் மனதிற்கு நெருக்கமான தொடர் மற்றும் அன்பிற்கு நன்றி. புது பிராஜெக்ட் உடன் உங்களை மகிழ்விப்பேன். உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் ஆசிர்வாதம் எனக்கு தேவை என்று பதிவிட்டிருக்கிறார்.

சிபு சூரியன் ரோஜா சிரியலில் இருந்து விலகுவதாக பதிவிட்டிருப்பது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதே நேரத்தில், இனி அர்ஜுனாக யார் நடிக்கப் போகிறார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Roja serial hero sibbu exits sun tv fans get shock

Exit mobile version