ரோஜா சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் ஆனவர் நடிகை பிரியங்கா நல்காரி. இதையடுத்து, பிரியங்கா நல்காரி ஜீ தமிழ் சீரியலில் நடித்தார்.
டிவி சீரியலில் நடித்துக் கொண்டிருந்த பிரியங்கா நல்காரி, மலேஷியாவை சேர்ந்த காதலரை திருமணம் செய்து கொண்டு மலேஷியா சென்றுவிட்டார் என்றும், சில மாதங்களில் அவர் கணவரை பிரிந்துவிட்டார் என்றும் செய்திகள் பரவியது.
அதே நேரத்தில், பிரியங்கா நல்காரி, மீண்டும் கணவருடன் சேர்ந்துவிட்டார் என்றும், அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருவருகிறார்.
ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி, தற்போது மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஹோட்டல் ஒன்றை திறந்திருக்கிறார்.
பிரியங்கா நல்காரி சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு தனது ஹோட்டலில் பில் போடும் வேலை செய்யும் போட்டோவை வெளியிட்டு உள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல், டி.ஆர்.பி-யில் பல மாதங்கள் டாப்பில் இருந்தது. ரோஜா சீரியலில் பிரியங்கா நல்காரியின் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்து பிரபலமானது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“