ரோஜா சீரியல்: அக்னி சட்டி, முள் செருப்பு, முள் படுக்கை… ஒரு நியாய தர்மம் வேண்டாமா?

5, 10 வருடத்திற்கு முன்பு இந்த மாதிரி கதைகள் என்றால், குடும்பங்களிடம், குறிப்பாக பெண்களிடம் பெரும் வரவேற்பைப் பெரும்.

By: Updated: November 28, 2019, 12:19:15 PM

Sun TV’s Roja Serial : சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் வர வர சுவாரஸ்யம் குறைந்து, சவ்வாக இழுக்கின்றனர்.  சீரியலின் நாயகியான ரோஜாவுக்கு பூஜை அறையில் வெடித்த வெடிகுண்டால் கண்பார்வை போய் விடுகிறது.

சிகிச்சையளிக்க வந்த மருத்துவரையும், வெடிகுண்டு வைத்த அனுவே ஆள் வைத்து கடத்துகிறார். இதனால் அங்காள பரமேஸ்வரி தான் துணை என அமுதநாயகி அம்மாவின் ஆசிரமத்தில் முகாமிட்டுருக்கின்றனர் அர்ஜுன், ரோஜா, கல்பனா ஆகிய மூவரும். இதையும் கண்டுபிடித்த அனு, எதிர் ஹோட்டலில் ரூம் போட்டு தங்கி வில்லத்தனத்தை காட்டி வருகிறாள். பரிகாரத்தை முறைப்படி செய்தால் ரோஜாவுக்கு கண்பார்வை வரும் என்ற நம்பிக்கையில் முழு மூச்சாக பரிகாரம் செய்து வருகிறான் ரோஜாவின் கணவனான அர்ஜுன்.

ரோஜாவுக்கு கண் பார்வை வரக் கூடாது என்பதில் முழு மூச்சாக இருக்கும் அனுவின் குழி, உச்சக்கட்டமாக அர்ஜுனை கொலை செய்யவும் திட்டமிடுகின்றனர். முள் செருப்பு, அக்னி விளக்கு பரிகாரமெல்லாம் முடித்து தற்போது முள் படுக்கை வரை சென்று விட்டார்கள். இதனை பார்த்த ரசிகர்களுக்கு எரிச்சல் அதிகரித்துள்ளது.

வானத்தை தொட்ட வெங்காய விலை. கவலையில் மக்கள்!

இந்த மாதிரியான மூடநம்பிக்கைகளை சமூகத்தில் இருந்து அகற்ற பலரும் போராடி வரும் நிலையில், இன்னும் இப்படியான காட்சிகளை ஏன் சீரியலில் வைக்கிறீர்கள் என அந்த சீரியலின் யூ-ட்யூப் பக்கத்தில் கமெண்டிட்டு வருகிறார்கள் ரசிகர்கள். 5, 10 வருடத்திற்கு முன்பு இந்த மாதிரி கதைகள் என்றால், குடும்பங்களிடம், குறிப்பாக பெண்களிடம் பெரும் வரவேற்பைப் பெரும். ஆனால் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மூட நம்பிக்கைகளில் இருந்து வெளிவந்து, நிதர்சனத்தைப் புரிந்துக் கொள்ள பழகியிருக்கிறார்கள் மக்கள். அதற்குள் மீண்டும் அவர்களின் சிந்தனையில் மண் அள்ளி போட வேண்டுமா…

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Roja serial priyanka sun tv arjun

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X