Roja Serial: ரோஜாவை சந்திக்கும் செண்பகம்… பழசெல்லாம் ஞாபகம் வருமா?

Roja Serial recent viral promo video Tamil News உண்மை தெரிந்துவிட்டால் சீரியல் முடிந்துவிடும். அதனால் நிச்சயம் உண்மையை சொல்ல மாட்டார்கள்.

Roja Serial recent viral promo video Tamil News
Roja Serial recent viral promo video Tamil News

Roja Serial recent viral promo video Tamil News : தினமும் இரவு 9 மணி எப்போது வரும் என்கிற எதிர்பார்ப்பைக் கொடுப்பது ரோஜா தொடர். நீண்ட நாள்களாக டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்திலிருந்த ரோஜா, சமீப காலமாக பின்னடைவு பெற்றிருக்கிறது. ஒரேயொரு சஸ்பென்ஸ்தான். அதை உடைந்துவிட்டால் தொடர் முடிவடைந்துவிடும். ஆனால், அதனை உடைக்காமல் பொத்திப்பொத்தி வைத்திருக்க இயக்குநரும் எவ்வளவுதான் போராடுவார்?

சிறு வயதில் பிரிந்துபோன குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் சேரும் கதைதான் என்றாலும், அதில் ஏராளமான ட்விஸ்டுகளை கொடுத்து மக்களைக் கண்ணிமைக்காமல் பார்க்கச் செய்யும் இயக்குநருக்கு வாழ்த்துகள். பிரிந்துபோன குடும்பத்தின் உண்மையான மகள் யார், விபத்தில் அனைத்தையும் மறந்த தாய்க்குத் தான் யார் என்கிற நினைவு திரும்புமா, தாயும் மகளும் இணைவார்களா என்கிற பல கேள்விகளை எழுப்பும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கின்றனர்.

அந்த வரிசையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோ, பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சமீபத்தில் ரோஜா தன் தாயை சந்திப்பதுபோன்ற ப்ரோமோ வெளியாகியது. இது டாப் ட்ரெண்டிங்கிலும் வந்தது. இதனைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த ரோஜா தொடரின் பிரத்தியேக ப்ரோமோ ஒன்றையும் வெளியிட்டிருக்கின்றனர். அதில், அன்பே வா, சித்தி 2, தாலாட்டு உள்ளிட்ட தொடர்களின் முக்கிய கதாபாத்திரங்கள், மறதியில் இருக்கும் தாய்க்கு நினைவு திரும்புமா? ரோஜா தன் தாயோடு இணைவாரா? அல்லது மகளாக நடிக்க வந்த அணுவை நினைவு திரும்பாத தாய் தன் மகளாக ஏற்றுக்கொள்வார்? என்று விவாதிப்பது போன்று உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ரோஜா தொடரின் இந்த பிரத்தியேக ப்ரோமோவிற்கு மக்களிடமிருந்து ஏராளமான கமென்ட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன. அவற்றில், ‘இது மீம்கவும் அருமையான ப்ரோமோ. முழு தொடருக்காகக் காத்திருக்கிறோம்’, ‘செண்பகம், ரோஜாவைதான் தன்னுடைய மகள் என்று சொல்லவேண்டும்’, ‘உண்மை தெரிந்துவிட்டால் சீரியல் முடிந்துவிடும். அதனால் நிச்சயம் உண்மையை சொல்ல மாட்டார்கள்’ உள்ளிட்ட கமென்ட்டுகள் ஏராளமாய் இருந்தன.

‘ஒரு காலத்தில் ரோஜா தொடர், மற்ற தொடர்களைப் பற்றிக் கூறியது. இப்போது, ரோஜா தொடர் பற்றி மற்ற சீரியல்கள் சொல்கின்றன’, ‘அனுவைதான் மக்கள் என்று சொல்லுவார்’, ‘அதிக எதிர்பார்ப்போடு இருக்கிறோம். எங்களை ஏமாற்றி விடாதீர்கள் இயக்குநரே’ என்றபடி கருத்துகளும், வேண்டுதல்களும் குவிந்துகொண்டே இருக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Roja serial recent viral promo video tamil news

Next Story
Raja Rani 2 Serial: சந்தியா சென்ற பஸ் ஆக்சிடென்ட்… ஆனா இது அந்த படத்தின் காட்சியாமே?Raja Rani 2 Serial, vijay TV Raja Rani 2 Serial latest promo, ராஜா ராணி 2 சீரியல், எங்கேயும் எப்போதும், விஜய் டிவி, ராஜா ராணி 2 சீரியல் லேட்டஸ்ட் புரமோ, Raja Rani 2, Raja Rani 2 Serial promo like Engeyum Eppothum movie scene, Vijay TV, Engeyum Eppothum movie, Engeyum Eppothum
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com