Roja serial :சன் டிவியில் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் ரோஜா சீரியல் தற்போது கலகலப்பின் உச்சமாக சென்றுக் கொண்டிருக்கிருக்கிறது. அதிலும் ரோஜா-அர்ஜூன் இடையில் நடக்கும் ரொமான்ஸ் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இன்றைய தினத்திற்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. என்ன பிளான் செய்தாலும் ரோஜாவையும், அர்ஜுனையும் பிரிக்க முடியவில்லை என புலம்புகிறார் கல்பனா. தற்போது ரோஜாவை மாட்டிவிடும் திட்டமாக வைர அட்டிகை வைத்து குடும்பத்துடன் சேர்ந்து புதிய பிளானை போடுகிறார் கல்பனா.
இதற்கிடையில், லெட்டர் மாறி ரோஜாவிடம் பேச மாடிக்கு வருகிறார் அர்ஜூன். ஆனால் அந்த லெட்டரை எழுதியவர் மாமியர் சுமதி தான். இது தெரியாமல் அர்ஜூன் ரோஜாவிடம் ரொமான்ஸ் செய்ய இந்த நேரம் பார்த்து மாடிக்கு வருகிறார் சுமதி.அடுத்து என்ன நடக்கும் என்பது இன்றைய எபிசோட்டில் தெரியும்.
Pandian Stores serial:
நம்ம மீனாவா இது? என தொடர்ந்து ஆச்சரியம் தருகிறார் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள் மீனா. குடும்பத்தினர் மீது இவருக்கு நாளுக்கு நாள் பாசம் அதிகமாகிக் கொண்டே போகிறது. திருமண நாள் கொண்டாடும் மூர்த்தி தனத்திற்கு சர்ப்பிரைஸாக ஹோட்டலில் பார்ட்டி எல்லாம் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள் ஒட்டு மொத்த குடும்பமும்.
தங்களது குடும்பம் தந்த சர்ப்பிரஸைசில் கண்கலங்கி வெட்கப்பட்டுக் கொண்டே கேக்கை வெட்டுகின்றனர் மூர்த்தி தனம் ஜோடிகள்.இனிய திருமண வாழ்த்துக்கள்.
Sembaruthi promo:
ஆதிக்கும் உனக்கும் என்ன உறவு தொடர்ந்து பார்வதியை கேள்வியால் துளைக்கிறார் பிரியா. ஆதிக்கு பொருத்தமான பெண் யார் என சொல்லு என்று சில பெண்களின் ஃபோட்டோசை பார்வதி கையில் தரும் பிரியா அவரை சோதிக்க திட்டமிடுகிறார்.
அந்த புகைப்படங்களுடன் தன்னுடைய ஃபோட்டோ இருப்பதை பார்த்து ஷாக்கான பார்வதி அதிர்ச்சியில் நிற்கிறார். அப்போது தான் பார்வதியிடம் கேள்வி கேட்க தொடங்குகிறார் பிரியா. கடவுள் பக்தி கொண்ட பார்வதியை கற்பூரம் மேல் சத்தியம் செய்யும்படி பிரியா வற்புறுத்த என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலூங்கியுள்ளது.