மக்களிடம் அடி வாங்கிய ரோஜா சீரியல் நடிகர் … என்ன தப்பு செய்தாரோ…

Sun tv’s ROJA Serial latest news updates in tamil: ரோஜா சீரியலில் அடுத்து ஒளிபரப்பாக உள்ள ட்விஸ்ட் குறித்த தகவல்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

ROJA Serial Tamil News: next twist in roja serial revealed

ROJA Serial Tamil News: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களுள் ஒன்று ரோஜா. சில மாதங்களுக்கு முன்பெல்லாம் டிஆர்பி-யில் முதலிடத்தை பிடித்து வந்த இந்த சீரியல் தற்போது பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இதற்கு கதையில் ஏற்பட்ட தொய்வே காரணம் என ரசிகர்கள் கூறுகிறார்கள்.

எனினும், சீரியல் ரசிகர்களை ஈர்த்து வரும் ரோஜா சீரியல் கடந்த வார டிஆர்பி-யில் 3வது இடத்தை பிடித்து இருந்தது. தற்போது இந்த சீரியலில் வரும் நீதிமன்ற காட்சிகள் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும், சீரியலில் சில அடுத்தடுத்த திருப்பங்கள் அரங்கேறியும் வருகிறது.

இந்த நிலையில், ரோஜா சீரியலில் அடுத்து வரவுள்ள ட்விஸ்ட் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ரோஜா சீரியலில் அர்ஜுனை பொது மக்கள் போலீஸ் நிலையில் முன் கடுமையாக தாக்குகிறார்கள். அவரைக் காப்பாற்ற ரோஜா, சாண்டி, சந்திரகாந்தா உள்ளிட்டோர் தொடர்ந்து முயல்கிறார்கள். இந்த காட்சிகள் தான் இனி வரும் எபிசோடுகளில் ஒளிபரப்பாக உள்ளது என்று கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Roja serial tamil news next twist in roja serial revealed

Exit mobile version