/tamil-ie/media/media_files/uploads/2021/11/roshini.jpg)
பாரதி கண்ணம்மா சீரியலில் சில காரணங்கள் என்னால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என இவ்வளவு நாள் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி ஹரிப்ரியன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த சீரியல் தான் முன்னிலையில் உள்ளது. இந்த சீரியலில் அருண் பாரதியாகவும், ரோஷினி கண்ணம்மாவாகவும் நடித்து வந்தனர். தற்போது ரோஷினி மாற்றப்பட்டு, புது கண்ணம்மாவாக வினுஷா நடித்து வருகிறார்.
ஆனால் பழைய கண்ணம்மாவாக நடித்த ரோஷினிக்கு இந்த சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ரோஷினியை இன்ஸ்டாகிராமில் 9 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். மேலும் பாரதி கண்ணம்மா சீரியலின் வெற்றிக்கு ரோஷினியின் பங்கு குறிப்பிடத்தக்கது.
தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ள சீரியலின் புதிய ப்ரோமோ வினுஷாவை புதிய கண்ணம்மாவாக அறிமுகப்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை எபிசோடில் அவரது அறிமுகம் இருந்தது. டைவர்ஸ்க்கான நீதிமன்றக் காட்சியில் கண்ணம்மாவின் வருகைக்காக அனைவரும் காத்திருந்தனர், வினுஷா "டாக்டர்" பின்னணி இசையுடன் உள்ளே நுழைந்தார். திங்கட்கிழமை எபிசோடின் முடிவில் வினுஷா இனி புதிய கண்ணம்மாவாக தொடருவார் என்று குறிப்பிடப்பட்டது.
இனி கண்ணம்மாவாக இவர்..! 🙂
— Vijay Television (@vijaytelevision) November 15, 2021
பாரதி கண்ணம்மா - இன்று இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில #BarathiKannamma#VijayTelevisionpic.twitter.com/whK3fOTtHv
சீரியலைப் பொறுத்தவரை பாரதி, தன் மனைவி தன்னை ஏமாற்றிவிட்டதாக சந்தேகிக்கிறான், அவளுடன் வாழ மறுக்கிறான், அதேசமயம் கண்ணம்மா அவனிடமிருந்து விலகி, அவனுடைய உதவி இல்லாமல் தனியாக வாழ முடிவு செய்கிறாள். அவர்களுக்கு பிறக்கும் இரு குழந்தைகளில் ஒன்று பாரதியிடமும் மற்றொன்று கண்ணம்மாவிடமும் வளர்கிறது. இதில் பாரதிக்கு தான் வளர்க்கும் ஹேமா தன்னுடைய குழந்தை என தெரியாமலே வளர்க்கிறான். தற்போது பாரதி முறைப்படி கண்ணம்மாவை டைவர்ஸ் செய்ய நினைக்கிறான்.
பாரதி மற்றும் அவரது மாமியார் சௌந்தர்யா முன்னிலையில் புதிய கண்ணம்மா நீதிமன்றத்திற்குள் நுழைவதாக சமீபத்தில் ப்ரோமோ வெளியானது.
இந்தநிலையில் இதுவரை கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வணக்கம், எல்லாரும் எப்படி இருக்கீங்க? சில காரணங்களால் என்னால் "பாரதி கண்ணம்மா" சீரியலில் தொடர முடியவில்லை" என்று வீடியோ தொடங்கும் போது ரோஷினி கூறியதுடன், சீரியலில் இருந்து விடுபடும் முடிவை எடுத்ததற்காக தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
“நான் எடுத்த முடிவு உங்களை புண்படுத்தியிருந்தால், உங்கள் அனைவரிடமும் நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் இல்லாமல் என்னால் இந்த உயரத்தை எட்டியிருக்க முடியாது. எதிர்காலத்திலும் நீங்கள் எனக்கு ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறேன். மிக்க நன்றி” என்று ரோஷினி கூறினார். இந்த வீடியோவுடன் “அன்பிற்கு நன்றி” எனவும் ரோஷினி பதிவிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.