‘கெட்டப்’பை மாற்றிய முன்னாள் கண்ணம்மா: ரோஷினி லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

பாரதி கண்ணமா சீரியலில் நடித்து நம் அனைவரின் இதயங்களையும் கட்டிப்போட்ட ரோஷினி சமீபத்தில் சீரியலில் இருந்து விலகினார். இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்ட படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Roshini haripriyan
Roshini haripriyan instagram recent photo goes viral on social media

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடர் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இல்லத்தரசிகள், இளம்பெண்கள், குழந்தைகள் என அனைவரின் விருப்பமான தொடராக உள்ளது. இது ‘கிருஷ்ணகோலி’ என்ற பெங்காலி சீரியலின் தழுவலாகும்.

பாரதி கண்ணம்மா சீரியலில், அருண் பிரசாத், ஸ்வீட்டி, ஃபரினா ஆசாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் மக்களிடையே பிரபலமானது கொரோனாவுக்கு பின்னர் தான். கொரோனா பாதிப்பால் வீடுகளுக்குள் முடங்கியிருந்த மக்களுக்கு’ தொலைக்காட்சி தான் ஒரே பொழுதுபொக்காக இருந்தது.

அந்த சமயம் தான் பாரதி கண்ணம்மா சீரியல், பாரதியின் சந்தேகம், கண்ணம்மாவின் சுயமரியாதை போராட்டம் என பல திருப்பங்களுடன் பயணித்தது. அப்போது தான் பாரதி கண்ணம்மா சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் உயரத்துக்கு சென்றது.

அதற்கு முக்கிய காரணம், இத்தொடரில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி ஹரிப்பிரியனின் நடிப்பும், அந்த கதாபாத்திரத்திற்கான அழுத்தமும் தான். இந்த சீரியலுக்கு பிறகு கண்ணம்மாவாக நடித்த ரோஷினிக்கு ஏராளமான ரசிகர்கள் வரத் தொடங்கினர். அதனாலேயே பாரதி கண்ணம்மா சீரியல், எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருந்தது.

அதில் கண்ணம்மாவாக நடித்து அனைவரின் இதயங்களையும் கட்டிப்போட்ட ரோஷினி ஹரிப்பிரியன் சமீபத்தில் சீரியலில் இருந்து விலகினார். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கண்ணம்மாவுக்கு நிறைய படவாய்ப்புகள் வந்ததால், தொடரிலிருந்து விலகியதாக தகவல் வெளியாகின. தற்போது, அவருக்கு பதிலாக புதிய கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார்.

ரோஷினி ஹரிப்பிரியன் அடிப்படையில் ஒரு மாடல். அதிலிருந்து தான் அவருக்கு சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. தனது இன்ஸ்டாகிராமில் மாடர்ன் டிரெஸ், புடவை என அடிக்கடி போட்டோஷூட்களை பதிவிடுவார்.

இந்நிலையில் ரோஷினி தற்போது மொட்டை மாடியில் வைத்து எடுத்த தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் கிராப் டாப், ரஸ்ட் நிற பேண்ட் அணிந்து பார்க்க செம்ம மாடர்ன் லுக்கில் இருக்கிறார். அவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Roshini haripriyan instagram recent photo goes viral on social media

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com