புதுச் சேலை… அழகு சிலை… இவங்கதான் சமையல் அம்மான்னு சொன்னா யார் நம்புவாங்க!

Serial actress roshni haripriyan latest Tamil News: பாரதி கண்ணம்மா பிரபலம் ரோஷினி ஹரிபிரியன் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ இணைய பக்கங்களில் வைரலாகி வருகின்றது.

Roshini haripriyan tamil news: Bharathi kannama roshni’s latest insta video

Actress Roshni latest Tamil News: சின்னத்திரை பார்வையாளர்கள் இடையே மிகவும் வரவேற்பு பெற்ற சீரியலாக ‘பாரதி கண்ணம்மா’ உள்ளது. விஜய் டிவியில் இந்த சீரியலில் ஒளிபரப்பாகி ஹீரோயின் கண்ணம்மா ரோலில் நடிப்பவர் நடிகை ரோஷினி ஹரிபிரியன். இந்த சீரியல் மூலம் பிரபலமான இவருக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.

தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் கணவருடன் சண்டை போட்டுவிட்டு வந்து தனியாக உழைத்து வாழ்ந்துகொண்டிருக்கிறார் கண்ணம்மா. இருவரும் ஒன்று சேர வாய்ப்பு இருப்பது போன்ற காட்சிகள் சமீபத்திய எபிசோடுகளில் காட்டப்பட்டு வருகிறது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் பெரிய அளவில் இருக்கிறது.

சேலை அணிந்து மிகவும் எளிமையான தோற்றத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள நடிகை ரோஷினி, சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பவர். அதிலும் குறிப்பாக இன்ஸ்டகிராமில் ரொம்பவே ஆக்டிவாக இருப்பவர். இவர் சில தினங்களுக்கு முன்பு ஒரு கடையில் ஷாப்பிங் டிராலியில் அமர்ந்து செல்வது போன்ற வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

தொடர்ந்து துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் சில புகைப்படங்களை சமீபத்தில் அவர் வெளியிட்டு இருந்தார். அதை பார்த்த அவரது ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துனர். மேலும் இது நம்ம கண்ணம்மா தான! அடையாளம் தெரியவே இல்லையே! என தெரிவித்தனர்.

இந்நிலையில், புது சேலை அணிந்து தூரிகா பாடலுக்கு போஸ் கொடுக்கும் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருவதோடு தங்களது கமெண்ட்ஸ்களையும் தட்டிச் சென்றுள்ளனர்.

கமெண்ட்டில் ஒரு ரசிகர், “இது தான் சமையல் அம்மான்னு சொன்னா, எங்க அம்மா என்னடா ஏமாத்துறனு சொல்லுவாங்க…” என்று பதிவிட்டுள்ளார். இன்னும் சில ரசிகர்களோ ‘சிம்ப்ளி பியூடிபுல்’ என்றுள்ளனர்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Roshini haripriyan tamil news bharathi kannama roshnis latest insta video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com