Advertisment

நயன்தாராவுடன் கண்ணாம்மாவின் ’ஃபேன் கேர்ள்’ மொமெண்ட்!

நயன்தாராவின் தீவிர ரசிகையான ரோஷினி, அவரின் நிறைய படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.

author-image
WebDesk
New Update
Roshni Haripriyan Met Nayanthara

ரோஷினி ஹரிப்ரியன்

Roshni Haripriyan: தொலைக்காட்சி நடிகை ரோஷினி ஹரிபிரியன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'பாரதி கண்ணம்மா' சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.  அந்த சீரியலில் தனது நடிப்பால் பெரும் அலைகளை உருவாக்கி வருகிறார். கணவரிடமிருந்து பிரிந்த கண்ணம்மா தனது குழந்தையுடன் தனியே வாழ்ந்து வருகிறார். இன்னொரு குழந்தையை மாமியார் செளந்தர்யா வளர்ப்பதாக தற்போது கதை செல்கிறது.

Advertisment

Roshni Haripriyan Met Nayanthara நயன்தாராவுடன் ரோஷினி ஹரிப்ரியன்

சமீபத்தில் ரோஷினி தனது பாரதி கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் தன்னைப் பற்றிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அந்தப் படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்நிலையில் தற்போது ரோஷினியின் இன்ஸ்பிரேஷன் நடிகையான நயன்தாராவுடன் அவர் எடுத்துக் கொண்ட படம் இணையத்தில் வலம் வருகிறது.

அதில் ரோஷினியின் ‘ஃபேன் கேர்ள்’ மொமெண்ட் தெரிகிறது. நயன்தாராவின் தீவிர ரசிகையான ரோஷினி, அவரின் நிறைய படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். தற்போது அவருடன் தான் எடுத்திருக்கும் படத்தை பதிவிட்டிருக்கிறார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Nayanthara
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment